Tamil Top 10 News: வருத்தம் தெரிவித்த ஜெயக்குமார் முதல் உதயநிதி பிரான்ஸ் பயணம் வரை - டாப் 10 நியூஸ்..!-check out the full story of tamil top 10 news on august 08 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News: வருத்தம் தெரிவித்த ஜெயக்குமார் முதல் உதயநிதி பிரான்ஸ் பயணம் வரை - டாப் 10 நியூஸ்..!

Tamil Top 10 News: வருத்தம் தெரிவித்த ஜெயக்குமார் முதல் உதயநிதி பிரான்ஸ் பயணம் வரை - டாப் 10 நியூஸ்..!

Karthikeyan S HT Tamil
Aug 08, 2024 06:52 PM IST

Tamil Top 10 News: அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வருத்தம் தெரிவித்தது, அமலாக்கத்துறை உதவி இயக்குநர் கைது, அமைச்சர் உதயநிதி பிரான்ஸ் பயணம் உள்ளிட்ட முக்கிய செய்திகளை இங்கு காணலாம்.

Tamil Top 10 News: வருத்தம் தெரிவித்த ஜெயக்குமார் முதல் உதயநிதி பிரான்ஸ் பயணம் வரை - டாப் 10 நியூஸ்..!
Tamil Top 10 News: வருத்தம் தெரிவித்த ஜெயக்குமார் முதல் உதயநிதி பிரான்ஸ் பயணம் வரை - டாப் 10 நியூஸ்..!

வருத்தம் தெரிவித்தார் ஜெயக்குமார்

ஜாமின் நிபந்தனைக்காக கையெழுத்திடக் காவல் நிலையம் சென்றபோது முதலமைச்சர் மற்றும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வருத்தம் தெரிவித்தார்.

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் (ஆக.8,9) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேரத்தோடு சேர்த்து குறளும் கேட்கலாம்..

சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலை பூங்கா மறுசீரமைப்பு செய்யப்பட்டதில், புதிதாக திருக்குறள் சொல்லும் மணிக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு திருக்குறள் சொல்லி, அதற்கான விளக்கத்தையும் சொல்கிறது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோல் இன்னும் பல இடங்களில் வைத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

3 ஆண்டுகள் தடை

விதிகளை மீறியதற்காக, ஒலிம்பிக்ஸ் தொடரில் இருந்து வெளியேற்றப்ட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கலுக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விளாசும் செல்வப் பெருந்தகை

மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிற பாஜக ஆட்சியாளர்கள் மூன்றாவது முறை ஆட்சியில் அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமராக மோடி பொறுப்பேற்றாலும், அவரது செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை உதவி இயக்குநர் கைது

டெல்லியில் நகை வியாபாரியிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவை கைது செய்தது சிபிஐ. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் அமந்தீப் சிங்கிடம் இருந்து ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

23 தமிழக மீனவர்கள் கைது

புத்தாளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர். எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அனைவரையும் கைது செய்து, அழைத்து சென்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் மீனவர்கள் பிரச்னை குறித்து, தமிழக எம்பிக்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 24 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று (ஆகஸ்ட்8) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஆடிஷன் அறிவிப்பு

குட்டி பாடகர்களுக்கு அரிய வாய்ப்பு அளிக்கும் விதமாக விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஆடிஷன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 40 நகரங்களில் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சிக்கான இந்த ஆடிஷன் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்வாக புதுக்கோட்டையில் தொடங்கி 40 நகரங்களில் இந்த நேரடி தேர்வுகள் விஜய் டிவியால் நடத்தப்படுகிறது.

அமைச்சர் உதயநிதி பிரான்ஸ் பயணம்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை நேரில் கண்டு ரசிப்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ளார் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளை சந்தித்து, ஊக்கப்படுத்தும் வகையிலும் இப்பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.