IPS Transfer: ஒரே நேரத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு - முழு விபரம் இதோ..!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ips Transfer: ஒரே நேரத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு - முழு விபரம் இதோ..!

IPS Transfer: ஒரே நேரத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு - முழு விபரம் இதோ..!

Karthikeyan S HT Tamil
Aug 08, 2024 04:47 PM IST

IPS Officers Transfer: தமிழ்நாடு காவல்துறையில் 24 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

IPS Transfer: ஒரே நேரத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு - முழு விபரம் இதோ..!
IPS Transfer: ஒரே நேரத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு - முழு விபரம் இதோ..!

நீலகிரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், பெரம்பலூர், கரூர், சேலம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வந்த காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், திருப்பத்தூர், விருதுநகர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, தருமபுரி, தென்காசி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்த உத்தரவின் விபரம்:

  • சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நிஷா, நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • மதுரை தெற்கு மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்பி சுஜித் குமார், சென்னை துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு எஸ்பி எஸ். சக்தி கணேசன், சென்னைப் பெருநகர உளவுத்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி பள்ளியின் எஸ்பி எஸ்.செல்வநாகரத்தினம் திருவல்லிக்கேணி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
  • திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி கே.கார்த்திகேயன், கோவை மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருநெல்வேலி கிழக்கு சரக துணை ஆணையர் ஆதர்ஷ் பெசேரா, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னை பயங்கரவாத தடுப்புப்பிரிவு எஸ்பி புக்யா சினேகா பிரியா, சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக ஷ்ரேயா குப்தா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கவுதம் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நாகை மாவட்ட எஸ்.பி.யாக அருண் கபிலன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • விருதுநகர் மாவட்ட எஸ்பி பெரோஸ் கான், கரூர் மாவட்ட எஸ்.பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜி.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக பிரபாகர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • தருமபுரி மாவட்ட எஸ்.பி.யாக மகேஷ்வரன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் பி.ஆர்.ஸ்ரீநிவாசன், தென்காசி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • வேலூர் மாவட்ட எஸ்.பி.யாக மதிவாணன் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

சமீபத்தில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ் ஓய்வு பெற்று உள்ள நிலையில், அவருக்கு பதிலாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து இடமாற்றம் செய்யப்படும் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த மாதத்தில் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டு , புதிய காவல் ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையர் பதவி பறிக்கப்பட்ட சந்தீப் ராய் ராத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 08) உத்தரவு பிறப்பித்துள்ளது.

24 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - முழு விபரம் இதோ..!

 

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.