Super Singer Junior: குட்டி பாடகர்களுக்கு அரிய வாய்ப்பு..! விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஆடிஷன் அறிவிப்பு - எங்கு தெரியுமா?-vijay tv super singer junior season 10 audition announced - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Super Singer Junior: குட்டி பாடகர்களுக்கு அரிய வாய்ப்பு..! விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஆடிஷன் அறிவிப்பு - எங்கு தெரியுமா?

Super Singer Junior: குட்டி பாடகர்களுக்கு அரிய வாய்ப்பு..! விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஆடிஷன் அறிவிப்பு - எங்கு தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 09, 2024 12:31 PM IST

குட்டி பாடகர்களுக்கு அரிய வாய்ப்பு அளிக்கும் விதமாக விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஆடிஷன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 40 நகரங்களில் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சிக்கான இந்த ஆடிஷன் நடைபெற இருக்கிறது.

குட்டி பாடகர்களுக்கு அரிய வாய்ப்பு, விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஆடிஷன் அறிவிப்பு
குட்டி பாடகர்களுக்கு அரிய வாய்ப்பு, விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஆடிஷன் அறிவிப்பு

சமீபத்தில் சீனியர்களுக்கான பத்தாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதன் தொடர்ச்சியாக சூப்பர் சிங்கர் ஜூனியர் சீஸனுக்கான முதல் கட்ட நேர்முக தேர்வு (ஆடிஷன்) தொடங்கப்படவுள்ளது. அனைவரும் அறிந்ததுபோல பாடல் பாடும் திறமை வாய்ந்த யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகப்புகழ் அடைந்துவிடக்கூடிய வாய்ப்பு, பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

புதுக்கோட்டையில் தொடங்கும் ஆடிஷன்

புதுக்கோட்டையில் இதன் நேரடி வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி தேர்வு ஆரம்பமாகவுள்ளது. முதல் கட்ட தேர்வாக புதுக்கோட்டையில் தொடங்கி 40 நகரங்களில் இந்த நேரடி தேர்வுகள் விஜய் டிவியால் நடத்தப்படுகிறது.

புதுக்கோட்டைக்கு பின்னர் திருச்சி, மதுரை, கோவை, மற்றும் சென்னையில் இதன் இரண்டாம் கட்ட தேர்வுகள் மற்றும் அடுத்தகட்ட தேர்வுகள் நடைபெறு இருக்கிறது. இந்த நேர்முக தேர்வில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் திறமைந்த போட்டியாளர்கள் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீஸன் 10 நிகழ்ச்சியில் பங்குபெறுவார்கள்.

போட்டியில் கலந்து கொள்ள தகுதி

இந்த போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு 6 வயது முதல் 15 வயது ஆகும் சிறுவர்களாவார்கள். இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் விஜய் டிவியின் தொலைக்காட்சி மற்றும் அதன் சோசியல் மீடியா பிளாட்போர்ம் களில் தெரிவிக்கப்படும் அறிவிப்புகளில் அடிப்படையில் நேரடி தேர்வுகள் இடம்பெறும் இடங்களை தெரிந்துகொண்டு நேரில் வந்து கலந்துகொள்ள வேண்டும்.

இந்த ஆடிஷன்கள் முடிந்த பின், சூப்பர் சிங்கர் ஜூனியர் சீஸன் 10 விரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும்.

சூப்பர் சிங்கர் ஜூனியர்

குழந்தைகளுக்கான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி 2007 முதல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்று கூறப்பட்டு, சிறந்த குட்டி பாடகர்களை கண்டறியும் இந்த போட்டியில் அறிமுக பாடல், புதிய பாடல், ப்ரீ ஸ்டைல் பாடல், வெஸ்டர்ன் பாடல்கள், ஃபோக் பாடல்கள் என பல்வேறு சுற்றுக்களில் போட்டி நடத்தப்படுகிறது. சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியை காட்டிலும் சூப்பர் சிங்கர் ஜூனியர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நிகழ்ச்சியாக உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கர் சீசன் 9 இறுதிப்போட்டி டிசம்பரில் நடந்தது. இதில் டைட்டில் வின்னராக வி.எம். ஸ்ரீநிதா என்ற குட்டி பாடகி தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு வெற்றியாளர் கோப்பை மற்றும் பரிசாக ரூ. 60 லட்சம் வழங்கப்பட்டது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை கடந்த சீசனில் தொகுத்து வழங்கிய மாகப ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் இந்த சீசனிலும் தொகுத்து வழங்க உள்ளார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சி, டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரிலும் ஸ்டிரீம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.