தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'ரயில்களில் இந்த பொருட்களை எடுத்து சென்றால் குற்றம்' - தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை

'ரயில்களில் இந்த பொருட்களை எடுத்து சென்றால் குற்றம்' - தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை

Karthikeyan S HT Tamil
Aug 26, 2023 11:02 AM IST

ரயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்து செல்வது தண்டனைக்குரிய குற்றம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்து செல்வது தண்டனைக்குரிய குற்றம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்து செல்வது தண்டனைக்குரிய குற்றம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதற்கு சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட சிலிண்டரே காரணம். சட்டவிரோத சிலிண்டரில் பயணிகள் சமையல் செய்ய முயன்ற போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகாலை 5.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாகவும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காலை 5.45 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலின் இரு பெட்டிகளில் பற்றிய தீ காலை 7.15 மணிக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எனவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்து செல்வது தண்டனைக்குரிய குற்றம் எனவும் எளிதில் தீப்பற்றக்கூடிய, வெடிக்கக் கூடிய பொருட்கள் இல்லாமல் பயணிகள் ரயிலில் பயணிக்க வேண்டும் எனவும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

கேஸ் சிலிண்டர்கள், பட்டாசுகள், அமிலம், மண்ணெண்ணெய், பெட்ரோல், தெர்மிக் வெல்டிங், அடுப்பு போன்ற தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் வெடிபொருட்களை எடுத்துச் செல்வது 1989 ரயில்வே சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்