தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Career Guidance : அடுத்தவங்க என்ன செய்யலாம்னு வழிகாட்ட ஒரு படிப்பா? எப்படி படிக்கலாம்? எங்க வேலை கிடைக்கும்?

Career Guidance : அடுத்தவங்க என்ன செய்யலாம்னு வழிகாட்ட ஒரு படிப்பா? எப்படி படிக்கலாம்? எங்க வேலை கிடைக்கும்?

Priyadarshini R HT Tamil
Jun 26, 2023 11:17 AM IST

Career Guidance : கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வேலை வழிகாட்டுதல் படிப்புக்கு வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

எனவே வழிகாட்டி இருந்தால், ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி, போதிய கல்வி மற்றும் வேலைகளுக்கு செல்ல அவர்களை ஆயத்தப்படுத்தவும், அவர்கள் வாய்ப்புகளை தெரிந்துகொள்ளவும் நல்ல வாய்ப்பாக இருக்கும். வழிகாட்டி வல்லுநர்கள் இருந்தால், எவ்வித அழுத்தமும் இன்றி மாணவர்கள் தங்களின் துறையை தேர்வு செய்யவும், அதற்கு உண்டான வழிகாட்டுதலை பெறவும் ஏதுவாக இருக்கும்.

இன்றைய மாணவர்கள் பல்வேறு திறமைகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால், பல திறன்கள் இருந்தும் அந்த திறன்களுக்கு ஏற்ற வழிகாட்டுதல் இல்லாததால் அவர்களுக்கு துறையை தேர்வு செய்வது, வேலைக்கு செல்வது, தொழில் முனைவோராவது, போட்டி தேர்வுக்கு தயாராவது அல்லது உடனடியாக வேலைக்கு செல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது.

என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாமல் மூன்று ஆண்டு முடிவில் அவர்களால் தங்களுக்கான துறையை உடனடியாக அடைய முடியாத சூழ்நிலை உள்ளது.

ஒவ்வொரு கல்லூரியிலும் குறைந்தபட்சமாக 1,000 மாணவர்களுக்கு ஒரு கல்வி மற்றும் வேலை வழிகாட்டி வல்லுநர் இருந்தால் மட்டுமே ஒரு சிறந்த வழிகாட்டுதலை வழங்க முடியும். ஏற்கனவே கல்லூரிகளில் வேலைவாய்ப்பு அலுவலர் அமர்த்தப்பட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு ஒரு முறையான வழிகாட்டுதல் கல்வி இருந்தால் மட்டுமே அவர்களால் ஒரு மாணவனை அடுத்த நிலைக்கு தயார் செய்ய முடியும்.

எனவே, இதுபோன்ற சவால்களை சமாளிக்கவும் தேவையான வழிகாட்டுதலுக்கு உண்டான படிப்பை வழங்கவும் பாரதியார் பல்கலைக்கழக வேலை வழிகாட்டி துறையின் சார்பில் இரண்டு ஆண்டு முதுகலை கேரியர் கைடன்ஸ் மற்றும் ஓராண்டு பட்டைய படிப்பான கெரியர் கைடன்ஸ் ஃபார் எக்ஸிக்யூடிவ்ஸ் (இணையவழி) ஆகிய படிப்புகள் வழங்கப்பட்டுவருகிறது.

இந்த படிப்புகளில் சேர்வதற்கு இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு இணையவழி பட்டயப்படிப்புக்கு முக்கியமாக பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோர்  https://b-u.ac.in/146/pg-admission என்ற இணையளத்தில் வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளை படித்த மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் கேரியர் கைடாகவும், கல்லூரிகளில் வேலைவாய்ப்பு அலுவலராகவும், நிறுவனங்களில் பயிற்சியாளர் மற்றும் ஹெச்ஆர் துறையிலும் வேலை செய்யமுடியும்.

மேலும் மாணவர்கள் சொந்தமாக வழிகாட்டுதல் மையத்தையும் தொடங்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2428239, 95650015656, 9566849767 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு பல்கலைக்கழக வட்டாராங்கள் தெரிவித்தன.

IPL_Entry_Point

டாபிக்ஸ்