தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai: ’100 ஆண்டுகால நாகை மருத்துவமனையை மாற்றுவதா! அரசின் உண்மையான நோக்கம் என்ன’ திமுக அரசை சாடும் அண்ணாமலை!

Annamalai: ’100 ஆண்டுகால நாகை மருத்துவமனையை மாற்றுவதா! அரசின் உண்மையான நோக்கம் என்ன’ திமுக அரசை சாடும் அண்ணாமலை!

Kathiravan V HT Tamil
Jun 16, 2024 07:32 PM IST

”மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப், போதுமான பேருந்து வசதிகளோ, சாலை வசதிகளோ ஏற்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவசரகால சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை போன்றவற்றுக்கு, 15 கிமீ தொலைவில் உள்ள ஒரத்தூர் கிராமத்திற்குச் சென்று சிகிச்சை மேற்கொள்வது என்பது முற்றிலும் கடினமான ஒன்று”

Annamalai: ’100 ஆண்டுகால நாகை மருத்துவமனையை மாற்றுவதா! அரசின் உண்மையான நோக்கம் என்ன’ திமுக அரசை சாடும் அண்ணாமலை!
Annamalai: ’100 ஆண்டுகால நாகை மருத்துவமனையை மாற்றுவதா! அரசின் உண்மையான நோக்கம் என்ன’ திமுக அரசை சாடும் அண்ணாமலை!

நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையை மூடும் முயற்சியைக் கைவிட வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். 

இடமாற்றம் செய்யப்படும் நாகை தலைமை மருத்துவமனை 

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், நாகப்பட்டினம் நகரப் பகுதிகளில், மீனவ மக்கள், விவசாயிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், நகரைச் சுற்றியிருக்கும் கிராமப் பகுதிகளில் சுமார் 4 லட்சம் பொதுமக்களும் வசித்து வருகின்றனர். நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனை, சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில், உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சை பெற்று வந்தனர்.