தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Vaiko: முன்பு போல் செயல்பட முடியுமா? - மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட வைகோ!

Vaiko: முன்பு போல் செயல்பட முடியுமா? - மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட வைகோ!

May 29, 2024 10:55 AM IST Karthikeyan S
May 29, 2024 10:55 AM IST
  • சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு இன்று (மே 29) அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவமனையில் இருந்தபடியே வைகோ வெளியிட்ட வீடியோவில், "நான் நன்றாக இருக்கிறேன். முழு ஆரோக்கியத்தோடு உள்ளேன். நான் முன்பு போன்று இயங்க முடியுமா? என்று யாரும் சந்தேகம் பட வேண்டாம். நான் உழைப்பு என்பதற்கு இலக்கணமாக இருக்கக்கூடியவன் என்பதை கலைஞர் சொல்லியிருக்கிறார். பொது வாழ்வில் அக்கறை உடையவர்கள் எல்லோருக்கும் நான் சொல்லிக் கொள்வது, தமிழ்நாட்டில் செய்ய வேண்டிய சேவைகளை செய்வதற்கு நான் காத்துக் கொண்டிருக்கிறேன். வைகோ முழு நலத்தோடு, முழு ஆரோக்கியத்தோடு வருவேன் என்பதை எனக்காக கவலைப்படும் உள்ளங்களுக்கு தெரிவித்து என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
More