தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Petrol Diesel Price Hike: ’முடிந்து போன நாடாளுமன்றத் தேர்தல்!’ பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கொதிக்கும் பாஜக!

Petrol Diesel Price Hike: ’முடிந்து போன நாடாளுமன்றத் தேர்தல்!’ பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கொதிக்கும் பாஜக!

Kathiravan V HT Tamil
Jun 15, 2024 08:25 PM IST

Petrol Diesel Price Hike: கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தி அம்மாநில காங்கிரஸ் அரசு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.

Petrol Diesel Price Hike: ’முடிந்து போன நாடாளுமன்றத் தேர்தல்!’ பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கொதிக்கும் பாஜக!
Petrol Diesel Price Hike: ’முடிந்து போன நாடாளுமன்றத் தேர்தல்!’ பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கொதிக்கும் பாஜக!

ட்ரெண்டிங் செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி உயர்வு 

இது தொடர்பாக நிதித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் மீதான விற்பனை வரி 25.92 சதவீதத்தில் இருந்து 29.84 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.  டீசல் மீதான வரி 14.34 சதவீதத்தில் இருந்து 18.44 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

கர்நாடகாவில் அதிக இடங்களை வென்ற பாஜக

கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 19 தொகுதிகளிலும், பாஜக 17 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆலோசனை 

கர்நாடக முதலமைச்சராகவும், நிதித்துறை அமைச்சராகவும் உள்ள சித்தராமையா, மாநிலத்தின் வருவாய் மற்றும் நிதிநிலையை மதிப்பாய்வு செய்த பிறகு இந்த முட்டிவை எடுத்து உள்ளதாக தெரிய வருகின்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, வருவாய் மற்றும் வசி வசூல் தொடர்பான இலக்குகளை அடைய அதிகாரிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கேட்டுக்கொண்டு உள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் நிதியாண்டில் ரூ.2,500 கோடி முதல் ரூ.2,800 கோடி வரை கிடைக்கும் என கர்நாடக அரசு எதிர்பார்க்கிறது.

கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு பாஜக கண்டனம் 

ஆளும் கர்நாடக காங்கிரஸ் அரசின் இந்த முடிவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா வலியுறுத்தி உள்ளார். 

"மக்களவைத் தேர்தலில் தோல்வியை எதிர்கொண்டுள்ள முதல்வர் சித்தராமையா, மாநிலத்தின் நிதி நிலைமை மோசமடைந்து உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை, ஆனால் எரிபொருள் விலை உயர்வு அதை நிரூபிக்கிறது. உத்தரவாதங்களால் அரசாங்கத்தால் நிர்வாகத்தை நடத்த முடியவில்லை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார். 

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்ததற்காக கன்னட மக்களை ஆளும் காங்கிரஸ் அரசு பழிவாங்குகிறது என்று கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா குற்றம்சாட்டி உள்ளார். 

"அறிவியல்பூர்வமற்ற உத்தரவாதத் திட்டங்களால் மாநிலத்தின் கருவூலத்தை காலி செய்த பின்னர், கன்னடர்களுக்கு வரியை அதிகரிப்பதன் மூலம் மூலம் அரசு கருவூலத்தை நிரப்பப் போகிறது" என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். 

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது அரசாங்கத்தின் முதன்மை ஐந்து உத்தரவாத திட்டங்களுக்காக இந்த ஆண்டு ரூ .52,009 கோடியை ஒதுக்கியுள்ளார்.

காங்கிரஸின் 5 வாக்குறுதிகள்

அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதலாக 5 கிலோ அரிசிக்கு பதிலாக ரொக்கம் செலுத்துதல், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை,க் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், உள்ளிட்ட திட்டங்களை கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வருகின்றது. 

WhatsApp channel

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.