தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Baby Elephant : அடுத்த குட்டி யானையை வளர்க்கப்போகும் பொம்மன் – பெள்ளி

Baby Elephant : அடுத்த குட்டி யானையை வளர்க்கப்போகும் பொம்மன் – பெள்ளி

Priyadarshini R HT Tamil
Mar 24, 2023 03:55 PM IST

Mudhumalai Forest : முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன் – பெல்ல தம்பதிகள் மேலும் ஒரு அனாதை குட்டி யானைக்கு பெற்றோர்களாகியிருக்கிறார்கள். அவர்கள் உற்சாகத்துடன் அந்த யானையை வரவேற்கும் வீடியோ பார்ப்பவர்களை நெகிழச்செய்கிறது.

கையில் ஆஸ்கர் விருதுடன் பொம்மன் - பெள்ளி
கையில் ஆஸ்கர் விருதுடன் பொம்மன் - பெள்ளி

ட்ரெண்டிங் செய்திகள்

அவர்கள் இருவரும் பெண்கள் என்பதாலும், அந்த விருது ஆவணப்படத்திற்கு கிடைத்ததாலும் இந்தியாவே அந்தப்பெண்கள் இருவரையும் ஆஸ்கர் நாயகிகள் என்று கொண்டாடியது. இதையடுத்து அவர்கள் இருவரும் இந்த விருது குறித்து பெருமிதம் தெரிவித்திருந்தார்கள். இந்தியாவில் அனைவரும் அப்பெண்களை பாராட்டினார்கள். தமிழக முதல்வர் கார்த்திகியை பாராட்டியதுடன், ஊக்கத்தொகையும் வழங்கி கவுரவித்தார்.

மேலும் இந்தப்படத்திற்கு கிடைத்த ஆஸ்கர் விருது படத்தில் தோன்றிய பெள்ளி மற்றும் பொம்மன்தம்பதியரிடம் கொடுக்கப்பட்டது. அந்த விருதை அவர்கள் கைகளில் ஏந்தி அவர்கள் புன்னகையுடன் போஸ் கொடுத்துள்ளார்கள். அந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கான்சால்வ்ஸ் ஆஸ்கர் விருதை படத்தில் தோன்றிய ரியல் நடிகர்களிடம் கொடுத்து அவர்கள் வெளிப்படுத்திய புன்னகை புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இந்த ஆவணப்படம் முழுவதுமே பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியினர் பராமரித்து வரும் யானைகள் பற்றிய கதைதான் இடம் பெற்றிருக்கும். ரகு என்ற ஆண் யானையையும், அம்மு என்ற பெண் யானையையும் அவர் எப்படி பராமரித்து வருகிறார்கள் என்பதை அந்தப்படம் உணர்ச்சி பூர்வமாக விளக்கியிருக்கும். இந்நிலையில் அவர்கள் மேலும் ஒரு யானையை தற்போது பராமரிக்கவுள்ளார்கள்.

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாஹீ தனது டிவிட்டில் தெரிவித்துள்ள தகவல்,

வாழ்க்கை வட்டம் தொடர்கிறது. தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் என்ற படத்திற்கு ஹேஷ் டாக் இட்டு, பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோர் தற்போது மற்றுமொரு அனாதை யானைக்கு வளர்ப்பு பெற்றோர்கள் ஆகியுள்ளார்கள். தர்மபுரியைச் சேர்ந்த அந்த குட்டியானை தற்போது முதுமலையில் உள்ளது. தமிழக வனத்துறை அந்த 4 மாதமேயான குட்டியானையை அதன் கூட்டத்துடன் சேர்ப்பதற்காக கடும் நடவடிக்கை எடுத்தது. ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ஆனால் தற்போது அந்த யானை பாதுகாப்பான கரங்களில் ஒப்டைக்கப்பட்டுவிட்டது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ரகுவையும், அம்முவையம் அரவணைத்துக் கொண்டதுபோல் அந்த இந்த குட்யானையையும் தங்கள் அன்பு கரங்களால் ஏந்திக்கொண்டார்கள். அவர்கள் அந்த குட்டியானையையும் கொஞ்சும் வீடியோவும் நெகிழ வைப்பதாக உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்