தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Anbujothi Ashram Case - National Child Welfare Commission Identified Conversion Of Religion By Giving Drugs

அன்புஜோதி ஆசிரம விவகாரம் - போதை மருந்து கொடுத்து மதமாற்றம் செய்தது அம்பலம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 15, 2023 08:37 AM IST

AnbuJothi Ashram case: டார்க் ரூம் என சொல்லப்படும் மர்ம அறையில் வைத்து போதை மருந்துகள் கொடுத்து மதமாற்றம் செய்திருப்பது அம்பலமாகியுள்ளதாக தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அன்புஜோதி ஆசிரமம் (கோப்புப்படம்)
அன்புஜோதி ஆசிரமம் (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் உள்பட 9 பேர் கைதி செய்யப்பட்டனர். அத்துடன் ஆசிரமத்திலிருந்து 140 பேர் மீட்கப்பட்டு பல்வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்ஜி ஆனந்த் தலைமையிலான குழுவினர் மாவட்ட ஆட்சியர் பழனி முன்னிலையில் அன்புஜோதி ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்பின்னர் தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அன்புஜோதி ஆசிரமத்தில் மதமாற்றம் செய்ய பயன்படுத்தப்பட்ட டார்க் ரூம் என சொல்லக்கூடிய அறை, ஆவணங்கள் வைப்பதற்கு பயன்படுத்திய அறையும் பூட்டி சீல் வைத்துள்ளோம்.

ஆசிரமத்திலிருந்து 35 ஆயிரம் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதை மருந்துகள் எங்கிருந்து வந்தது? யார் மூலமமாக எந்தெந்த மருத்துவமனைகளில் இருந்து வந்தது என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மருந்துகள் வந்த இடம் தொடர்பாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் 15 நாள்களுக்குள் அறிக்கை மூலம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஆசிரமத்தில் இரவு நேரத்தில் மதமாற்றம் செய்யும் வேலை நடந்துள்ளது. இதற்கான ஆதாரம் சிக்கியுள்ளது.

சிறார் ஒருவரின் வாக்குமூலத்தின் மூலம் 3 பேர் மதமாறஅறம் செய்திருப்பது உறுதியாகியுள்ளது. 60 பேர் மட்டும் தங்க வைக்க வேண்டிய அறையில் 140 பேரை அடைத்து வைத்துள்ளனர். சில பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இங்கு நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையை ஆணையத்திடம் சமர்பிப்போம். அதன் பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்