தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode:வாக்களிக்கும் போது எட்டிப்பார்த்த முகவர்; வாக்குச்சாவடியில் பரபரப்பு!

Erode:வாக்களிக்கும் போது எட்டிப்பார்த்த முகவர்; வாக்குச்சாவடியில் பரபரப்பு!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 27, 2023 01:02 PM IST

வாக்காளர் ஒருவர் வாக்களித்ததை முகவர் ஒருவர் பார்த்ததாக வாக்காளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

வாக்குச்சாவடியில் சலசலப்பு
வாக்குச்சாவடியில் சலசலப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் ஈரோடு பெரியண்ண வீதி வாக்குச்சாவடியில் வாக்காளர் ஒருவர் வாக்களிக்க வந்தார். பொதுவாக வாக்குச்சாவடிக்குள் வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.

அவர்கள்,தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்களுக்கு கூறக்கூடிய தகவல்கள் தங்களது பட்டியலில் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்த்துக்கொள்வர். இப்படி அனுமதிக்கப்படும் முகவர்கள் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை பார்க்க கூடாது. 

ஆனால் இங்கு வாக்காளர் ஒருவர் வாக்கு செலுத்தும் போது, அங்கிருந்த முகவர் ஒருவர் அதை எட்டிப்பார்த்ததாக தெரிகிறது. இதனால் அங்கிருந்த சக முகர்வலர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் அவர்களை சமாதானம் செய்து எச்சரித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா அண்மையில் காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இன்றைய தினம் (பிப்ரவரி 27/2023) இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். கடந்த ஜனவரி 31-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, கடந்த 7ஆம் தேதி நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்தது. இதில் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 6 வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். கடந்த 10 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தே.மு.தி.க சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

குறிப்பாக ஆளும் கட்சியான திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். எதிர்கட்சியான அ.தி.மு.க சார்பில் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும், தேமுதிக சார்பில் போட்டியிடும் ஆனந்தை ஆதரித்து அந்தக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜய்காந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனை ஆதரித்து அந்தக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் விதிகளின்படி நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவை முன்னிட்டு 2500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருக்கின்றனர். துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஈரோடு இடைத்தேர்தல் நாளை வாக்குப்பதிவு முடிந்து, மார்ச் மாதம் 2-ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படவிருக்கிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்