முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு ஒத்திவைப்பு, அரிசி மூட்டையில் பணக்கட்டு.. மேலும் விவரம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு ஒத்திவைப்பு, அரிசி மூட்டையில் பணக்கட்டு.. மேலும் விவரம்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு ஒத்திவைப்பு, அரிசி மூட்டையில் பணக்கட்டு.. மேலும் விவரம்

Manigandan K T HT Tamil
Published Oct 24, 2024 01:08 PM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று அக்டோபர் 24ம் தேதி காலை முதல் பிற்பகல் வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு ஒத்திவைப்பு, நாமக்கல் கவிஞர் மாளிகையின் கட்டடத்தில் திடீர் அதிர்வு.. மேலும் விவரம்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு ஒத்திவைப்பு, நாமக்கல் கவிஞர் மாளிகையின் கட்டடத்தில் திடீர் அதிர்வு.. மேலும் விவரம்
  • அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து நிர்வாக காரணங்களுக்காக சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் குற்ற எதிரிகள் ஆஜராகவில்லை. அடுத்த விசாரணை நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிர்ந்த கட்டடம்

  •  சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கட்டடத்தில் திடீர் அதிர்வு. பணியில் இருந்த ஊழியர்கள் பதறியடித்து வெளியேறியதால் பரபரப்பு.  "தலைமைச் செயலக கட்டிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது" என தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அதிர்வு ஏற்பட்டது குறித்து ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். “நாமக்கல் கவிஞர் மாளிகை உறுதியாக உள்ளது” -ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்துள்ளார்.
  •   மருது சகோதரர்களின் நினைவு நாளை ஒட்டி, சென்னை கிண்டியிலுள்ள அவர்களது திருவுருவ சிலைகளுக்கு அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
  •   “போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  •   கடலூர் மாவட்டம் வடலூரில் அரிசி மூட்டையில் 15 லட்சம் பணத்தை பதுக்கிய அரிசி வியாபாரி. பணம் இருப்பதை அறியாமல், பிரியாணி அரிசி என நினைத்து விற்பனை செய்த மைத்துனர். சிசிடிவி மூலம் மூட்டையை வாங்கிச் சென்ற நபரை கண்டறிந்து வியாபாரி சண்முகம் விசாரிக்க, மூட்டையில் 10 லட்சம்தான் இருந்தது என திரும்ப கொடுத்துள்ளனர். விவகாரம் காவல் நிலையத்துக்குச் செல்ல இருவரிடமும் போலீசார் விசாரணை நடந்து வருகிறது.

போலீஸாரை ஆபாசமாக பேசிய வழக்கில் கைதானவர் ஜாமின் மனு

  •   சென்னை மெரினா லூப் சாலையில் போலீசாரை ஆபாசமாக பேசிய வழக்கில் கைதான பெண், ஜாமின் கோரி மனு. காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. “தான் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவர், தவறுக்கு தான் மன்னிப்புக் கோரியுள்ளேன்” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  •   எதிர்வரும் நவம்பர் 2ம் தேதி தொடங்கும் கந்த சஷ்டியை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. 18 இடங்களில் பக்தர்கள் தங்க தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட உள்ளன. 225 நிரந்தர கழிவறைகள், 190 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்படுகின்றன. வாகன நிறுத்தம், குடிநீர், எல்.இ.டி. திரைகள், கூடுதல் சிசிடிவி கேமராக்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.
  •  கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 6000 கன அடியாக அதிகரிப்பு. அணையிலிருந்து 3313 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது 6,792 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் விடுத்தது.
  •  மதுரை மாநகரில் கனமழையால் தண்ணீர் சூழ்ந்த திருமலை நகர், பாண்டியன் நகர், அடமந்தை பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் ஆய்வு செய்தனர்.