தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Marudhu Senai President Aadhi Narayanan Has Filed A Police Complaint

Madurai: மருது சேனை தலைவரை கொல்ல முயற்சி..மதுரையை நடுங்க வைத்த சம்பவம்!

Mar 15, 2024 04:00 PM IST Karthikeyan S
Mar 15, 2024 04:00 PM IST
  • மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவர், மருது சேனை எனும் அமைப்பை தொடங்கி, அதன் நிறுவன தலைவராக செயல்படுகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணியில் போட்டியிட்டவர். இவரது அமைப்பின் அலுவலகம் கள்ளிக்குடி - கல்லுப்பட்டி சாலையில் உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில் தனது அலுவலகத்தில் இருந்து விருதுநகர் நான்கு வழி சாலையிலுள்ள மையிட்டான்பட்டிக்கு காரில் புறப்பட்டுச் சென்றபோது எதிர் திசையில் வேகமாக வந்த கார் ஒன்று ஆதிநாராயணன் கார் மீது மோதியுள்ளது. காரில் வந்த கும்பல், ஆதிநாராயணன் மீது பெட்ரோல் குண்டு வீசிய நிலையில், நல்வாய்ப்பாக காரின் மீது படாமல் தள்ளிச் சென்று வெடித்துள்ளது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்த அறிந்த மருது சேனை அமைப்பினர் உள்ளிட்டோர், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, கள்ளிக்குடி-விருதுநகர் நான்குவழிச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
More