TOP 10 NEWS: பிரதமரை சந்திக்கும் முதலமைசர் முதல் அம்பையில் நில அதிர்வு வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!-todays afternoon top 10 news including cm stalin meets pm modi eps talks about aiadmk thiruma comments on alcohol ban - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: பிரதமரை சந்திக்கும் முதலமைசர் முதல் அம்பையில் நில அதிர்வு வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: பிரதமரை சந்திக்கும் முதலமைசர் முதல் அம்பையில் நில அதிர்வு வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Sep 22, 2024 01:53 PM IST

TOP 10 NEWS: பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர், கேசவ விநாயகத்திற்கு சம்மன், அதிமுக இணைப்புக்கு இடமில்லை என்ற ஈபிஎஸ், மது விலக்கு குறித்து திருமா கருத்து, மீனவர்கள் கைதுக்கு அன்புமணி கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!

TOP 10 NEWS: பிரதமரை சந்திக்கும் முதலமைசர் முதல் அம்பையில் நில அதிர்வு வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: பிரதமரை சந்திக்கும் முதலமைசர் முதல் அம்பையில் நில அதிர்வு வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!

1.பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர் 

வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி அன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். தமிழ்நாட்டுக்கான நிதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த உள்ளதாக தகவல். 

2.கேசவ விநாயகத்திற்கு மீண்டும் சம்மன்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் அடுத்த வாரம் மீண்டும் ஆஜர் ஆக கோரி பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளனர். 

3.மதுவிலக்கு குறித்து திருமா கருத்து 

அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கும் போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும் என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து. 

4.இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை 

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி 4 பேர் நீக்கப்பட்டது என்பது நீக்கப்பட்டதுதான். அதிமுக இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து. 

5.அதிமுக ஒன்றுபடும் நாள் வெகுதூரம் இல்லை 

அதிமுக ஒன்றுபடும், வீறுகொண்டு எழும், மீண்டும் ஆட்சி அமைக்கும், இருள் நீங்கி ஒளி தோன்றும் நாள் வெகுதூரத்தில் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.   

6.அம்பாசமுத்திரம் பகுதியில் நில அதிர்வா?

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காலை 11.55 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வரை, அரசின் நில அதிர்வியல் இணையதளத்தில் பதிவுகள் எதுவும் வரவில்லை. கள அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7.கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் வாழ்த்து 

“பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றிவரும் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்கள் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் - அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய வாழ்த்துகள்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட். 

8.கடல் சீற்றத்தால் வீடுகள் சேதம் 

பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக கரையில் உள்ள வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளன. 

9.மீனவர்கள் கைதுக்கு அன்புமணி கண்டனம்

வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் பாரம்பரிய உரிமை உள்ள இடத்தில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து. 

10.அரசே துணை போவது கண்டிக்கத்தக்கது

தமிழ்நாட்டின் தேவை மாநிலக் கல்விக் கொள்கையா, தேசியக் கல்விக் கொள்கையா? என்பது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மாணவர்களை வருத்தாத கல்வி முறை தேவை என்ற சிந்தனை கொள்கைவகுப்பாளர்களிடம் இதுவரை எழவில்லை என்பது வேதனையளிக்கிறது. பாடச்சுமை மிகுந்த கல்வி தான் தரமான கல்வி என்ற தோற்றத்தை ஏற்படுத்த அரசே துணை போவது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை. 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.