தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore Elephant Walk: ஊருக்குள் ஜாலி வாக் போன யானை கூட்டம்; அதிர்ந்த பொதுமக்கள்!

Coimbatore Elephant Walk: ஊருக்குள் ஜாலி வாக் போன யானை கூட்டம்; அதிர்ந்த பொதுமக்கள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 21, 2023 11:43 AM IST

Coimbatore: வீடுகளின் முன்பு இருந்த மரங்களின் கிளைகளை உடைத்து சாப்பிட்டும், தண்ணீரை குடித்த படியும் மெதுவாக சாலைகளில் நடத்து திரிந்தன.

கோவையில் ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்
கோவையில் ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை மாவட்டம் சின்ன தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்த குட்டியானைகளுடன் யானை கூட்டம் ஒன்று வெளியேறியது. இந்த யானை கூட்டம் கிராமத்தின் சாலைகளில் ஜாலியாக சுற்றி திரிந்தன. 

வீடுகளின் முன்பு இருந்த மரங்களின் கிளைகளை உடைத்து சாப்பிட்டும், தண்ணீரை குடித்த படியும் மெதுவாக சாலைகளில் நடத்து திரிந்தன.

இந்நிலையில் யானை கூட்டம் ஊருக்குள் புகுந்த தகவல் அறிந்த பொதுமக்களும், வனத்துறையினரும் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதே போல நேற்று அதிகாலை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அரங்கசாமி என்பவரின் தோட்டத்திற்கு ஒற்றை யானை புகுந்தது. யானை தோட்டத்திற்குள் புகுந்து புகுந்து செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இதுபோல காட்டு யானைகள் ஊருக்குள் வருவதற்குக் காரணம், அதன் வழித்தடத்தை மறித்து கட்டிடங்கள் கட்டுவதுதான் என்று வன ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

“வனப்பகுதியில் யானை குறிப்பிட்ட பாதையில்தான் செல்லும். அந்த பகுதிகளில் அத்துமீறி மனிதர்கள் நுழைந்து கட்டிடங்களை கட்டிவிடுகிறார்கள். அதனால் வழி தெரியாமல் ஆத்திரமாகும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்துவிடுகின்றன. அதேபோல வனத்தில் இருக்கும் நீர் ஆதாரங்களையும் மனிதர்கள் அழித்து, கட்டிடங்களை கட்டுகிறார்கள். இதனால் தண்ணீர் தேவைக்காகவும் யானைகள் ஊருக்குள் நுழைந்துவிடுகின்றன. பயத்தில், எதிர்ப்படும் மனிதர்களை மிதித்துக் கொல்கின்றன. இதனால் கடந்த சில ஆண்டுகளாக மனித விலங்கு மோதல் அதிகரித்து வருகின்றன. சமீபகாலங்களாக ஊருக்குள் புகும் காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பது, ரயில் மோதி உயிரிழப்பது, கிணற்றில் விழுந்து உயிரிழப்பது போன்ற சோகமான நிகழ்வுகளும் அதிகரித்துள்ளது” என்று வன ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்