தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Opportunities : 750 எஸ்ஐ பணியிடம்; 332 ஆய்வக தொழில்நுட்பவியலாளர் வேலை – விண்ணப்பிக்க அழைப்பு

Job Opportunities : 750 எஸ்ஐ பணியிடம்; 332 ஆய்வக தொழில்நுட்பவியலாளர் வேலை – விண்ணப்பிக்க அழைப்பு

Priyadarshini R HT Tamil
Jun 18, 2023 11:03 AM IST

job Opportunity : 750 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 332 ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரே செய்தியில் இரு வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்கள் உள்ளன.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 01.07.2023 தேதியின்படி 20 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 01.7.1993 அன்றைய தேதிக்கு பின்போ 01.07.2003க்கு முன்போ பிறந்தவர்களாக இருக்கவேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு உண்டு. தமிழ் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 30.06.2023.

விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங் களை தெரிந்து கொள்வதற்கு  https://tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

சுகாதாரத்துறையில் வேலை

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி) மூலம் சுகாதாரத்துறையில் 332 ஆய்வக தொழில்நுட்பவியலாளர் (கிரேடு 3 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

12.06.2023 அன்றைய தேதிப்படி 12ம் வகுப்பு கல்வி தகுதியுடன் ஓராண்டு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப படிப்பை முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நல்ல உடல் அமைப்பு, தெளிவான பார்வைத் திறன் கொண்டிருக்க வேண்டும். 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், கணவரை இழந்த பெண்கள் போன்றவர்களுக்கு வயது வாம்பில் சலுகைகள் உண்டு. அத்துடன் அரசு விதிமுறைகனின்படியும் வயது தளர்வு அனுமதிக்கப்படும்.

பள்ளிப் படிப்பிலும், ஆய்வக தொழில்நுட்ப படிப்பிலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 02.07.2023

விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவாங்களை தெரிந்து கொள்வதற்குhttps://mrbonline.insing இணையதளத்தை பார்வையிடலாம்.

இவ்விரு பணிகளுக்கும் தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்