தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Women Police Suicide: ஆயுதப்படை பெண் காவலர் திடீர் தற்கொலை.. பணிச்சுமை காரணமா? - போலீஸ் தீவிர விசாரணை

Women Police Suicide: ஆயுதப்படை பெண் காவலர் திடீர் தற்கொலை.. பணிச்சுமை காரணமா? - போலீஸ் தீவிர விசாரணை

Karthikeyan S HT Tamil
Apr 21, 2023 10:54 AM IST

Women Police Suicide: நாகப்பட்டினம் ஆயுதப்படை பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை - கோப்புபடம்
தற்கொலை - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

திருச்சி மாவட்டம், உறையூரைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது மகள் கவிப்பிரியா. 27 வயதேயான இவர், நாகப்பட்டினம் ஆயுதப்படை பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் பணிக்கு சென்ற கவிப்பிரியா மதியம் சாப்பிடுவதற்காக காவலர் குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும், மீண்டும் அவர் பணிக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக காவலர்கள் கவிப்பிரியாவை செல்போனில் தொடர்பு கொண்டனர். அவர், செல்போன் அழைப்பை வெகுநேரம் எடுக்காததால் அவருடைய அறைக்கு சென்றுப் பார்த்துள்ளனர். அப்போது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால், கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது காவலர் கவிப்பிரியா துப்பட்டாவால் தூக்கிட்டு சடலமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் வெளிப்பாளையம் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கவிப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

காவலர் கவிப்பிரியா பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு ஏதும் காரணமா ? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

IPL_Entry_Point

டாபிக்ஸ்