தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime: ’தலைநகரமா? கொலை நகரமா?’ சென்னையில் 20 நாட்களில் 20 கொலைகள்!

Crime: ’தலைநகரமா? கொலை நகரமா?’ சென்னையில் 20 நாட்களில் 20 கொலைகள்!

Kathiravan V HT Tamil
May 03, 2023 12:56 PM IST

தலைநகரத்தில் நடைபெறும் தொடர் கொலைகள் மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் சென்னை மாநகர காவல்துறை என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை மற்றூம் அதன் சுற்றுவட்டாரத்தில் நடந்த கொலைகள் மற்றும் கொலையாளிகள்
சென்னை மற்றூம் அதன் சுற்றுவட்டாரத்தில் நடந்த கொலைகள் மற்றும் கொலையாளிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

கே.கே.நகரில் விசிக பிரமுகர் ரமேஷ் கொலை

கொலை செய்யப்பட்ட விசிக பிரமுகர் ரமேஷ்
கொலை செய்யப்பட்ட விசிக பிரமுகர் ரமேஷ்

சென்னை, கே.கே.நகர், அம்பேத்கர் குடிசை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற முண்டக்குட்டி ரமேஷ் (38). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருகை தொகுதி நிர்வாகியாக இருந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். மேலும் ரவுடிகளுக்கான பட்டியலில் `ஏ' பிரிவில் போலீஸாரால் வைக்கப்பட்டிருந்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருந்தன. இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி காரில் வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ரியல் எஸ்டேட் பிரமூகர் ராகேஷ் அவரது மனைவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாஜக பட்டியலின அணி நிர்வாகி பிபிஜி சங்கர் கொலை

பிபிஜி சங்கர்
பிபிஜி சங்கர்

பாஜக பட்டியலின அணி மாநில பொருளாளரான பிபிஜி டி.சங்கர், கடந்த மாதம் 27-ம் தேதி இரவு சென்னை - கொளத்தூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, காரில் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கும்பல் ஒன்றால் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 9 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

துறைப்பாக்கத்தில் வழக்கறிஞர் ஜெயகணேஷ் கொலை

வழக்கறிஞர் ஜெய்கணேஷ்
வழக்கறிஞர் ஜெய்கணேஷ்

சென்னையில் அமைந்துள்ளது துரைப்பாக்கதில் நேஇரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக 3 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

ஆதம்பாக்கத்தில் நகை பணத்திற்காக மூதாட்டி கொலை

மூதாட்டியை கொலை செய்த சக்திவேல் (45)
மூதாட்டியை கொலை செய்த சக்திவேல் (45)

சென்னை பழவந்தாங்கல், தில்லை கங்கா நகரைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (81) என்ற மூதாட்டிகடந்த 21-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்த 45 பவுன் நகை, ரூ.2 லட்சம்ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆதம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிந்து கொலை, கொள்ளை தொடர்பாக கே.கே.நகர், பாரதிதாசன் காலனியை சேர்ந்த சக்திவேல் (45) என்பவரை 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.

குன்றத்தூரில் விசிக பிரமூகர் கொலை

விசிக பிரமுகர் அதிஷ்
விசிக பிரமுகர் அதிஷ்

கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி குன்றத்தூர் அருகே குடும்ப தகராறின் காரணமாக, விசிக பிரமுகர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கமணி (60). இவருக்கு, குமரேசன் (40), சுகுமார் (38), முரளி (33), அதிஷ் (29) ஆகிய 4 மகன்கள் உள்ளனர். இவர்களில், கடைசி மகனான அதிஷ், விசிக ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளராக உள்ளார். குடும்பத் தகராறு காரணமாக அதிஷின் அண்ணன் மகன்களான சுகாஷ் (25), சுனில் (22) ஆகியோரே அதிஷை வெட்டிக் கொன்றனர்.

ரம்ஜான் கொண்டாட்டத்தில் குடிபோதையில் கொலை

கொலை செய்யப்பட்ட சஞ்சய்
கொலை செய்யப்பட்ட சஞ்சய்

சென்னை திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் கடற்கரையில் நண்பர்களுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாடத்தின் போது மது போதையில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராரில் சஞ்சய் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

டாஸ்மாக் கடையில் இரட்டை கொலை

கொலை செய்யப்பட்ட மனோஜ் மற்றும் திருவேங்கடம் - கொலை செய்து கைதான கோழி செல்வம்
கொலை செய்யப்பட்ட மனோஜ் மற்றும் திருவேங்கடம் - கொலை செய்து கைதான கோழி செல்வம்

நேற்றைய தினம் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபோதையில் தனது நண்பரான மனோஜ் என்பவரை கோழி செல்வம் என்பவர் வெட்டிகொன்றார். இதனை தட்டிக்கேட்ட திருவேங்கடம் என்பவரையும் அவர் கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தரமணியில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் குடிபோதையில் நடந்த கொலைகள் என 20 கொலைகள் நடந்துள்ளது. 

தலைநகரத்தில் நடைபெறும் தொடர் கொலைகள் மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி  உள்ள நிலையில் சென்னை மாநகர காவல்துறை என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்