தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wpl 2023: குஜராத் ஜெயின்ட்ஸ் அணியில் மிதாலி ராஜுக்கு முக்கியப் பொறுப்பு!

WPL 2023: குஜராத் ஜெயின்ட்ஸ் அணியில் மிதாலி ராஜுக்கு முக்கியப் பொறுப்பு!

Manigandan K T HT Tamil
Jan 29, 2023 12:51 PM IST

பெண்கள் பிரீமியர் லீக்கில் (WPL) குஜராத் ஜெயின்ட்ஸ் அணியின் வழிகாட்டி மற்றும் ஆலோசகராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் நியமிக்கப்பட்டார்.

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கான சாட்டிலைட் உரிமம், அணிகளின் ஏலம் ஆகியவை நடந்து முடிந்துவிட்டன.

குஜராத் ஜெயின்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் மகளிர், ராயல் சேலஞ்சர் பெங்களூரு மகளிர், டெல்லி கேபிட்டல்ஸ் மகளிர், லக்னோ மகளிர் அணி ஆகிய 5 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.

மகளிர் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை இந்தத் தொடர் தொடங்கி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குஜராத் ஜெயின்ட்ஸ் அணிக்கு ஆலோசகராக மிதாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் தங்கள் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐந்து WPL உரிமையாளர்களில் முதன்மையானது குஜராத் ஜெயின்ட்ஸ் ஆகும்.

அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரைவேட் லிமிடெட் இந்த அணியை ரூ.1,289-க்கு வாங்கியது.

முன்னதாக, மிதாலி ராஜும் மகளிர் ஐபிஎல் தொடரில் வீராங்கனையாக களமிறங்குவார் என்று கூறப்பட்டு வந்தது.

எனினும், தற்போது அவர் வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் குஜராத் அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக்கின் தொடக்க சீசன் மகளிர் கிரிக்கெட்டுக்கான ஒரு அற்புதமான நடவடிக்கையாகும், மேலும் அதானி குழுமத்தின் ஈடுபாடு விளையாட்டிற்கும் ஒரு பெரிய ஊக்கமாக உள்ளது என்று மிதாலி ராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பெண்கள் கிரிக்கெட் சீராக வளர்ந்து வருகிறது. மேலும் இதுபோன்ற உத்வேகம் இளம் பெண்களை தொழில்ரீதியாக கிரிக்கெட்டைப் பற்றி சிந்திக்க ஊக்குவிக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கேற்பு, இறுதியில் இந்தியாவுக்கு மேலும் பெருமையைக் கொண்டுவருவதற்கான செயல்முறையை விரைவுபடுத்த உதவும் என்று நான் நம்புகிறேன். இந்த அளவிலான செல்வாக்கு விளையாட்டு சூழலை வலுப்படுத்தவும், வீராங்கனைகளுக்கு வாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும்" என்றார்.

WhatsApp channel

டாபிக்ஸ்