தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Unstoppable ஆஸி., அணைக்கட்டப்போவது யார்? மகளிர் உலகக்கோப்பை டி20 இன்று தொடக்கம்

Unstoppable ஆஸி., அணைக்கட்டப்போவது யார்? மகளிர் உலகக்கோப்பை டி20 இன்று தொடக்கம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 10, 2023 01:53 PM IST

பெரிதும் எதிர்பார்க்கப்படும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் தென்ஆப்பரிக்கா - இலங்கை அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணியின் வெற்றிப்பயணத்தை தடுத்து நிறுத்தப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்
மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2020ஆம் ஆண்டில் மெல்போர்னில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வென்றது. முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்கப்பட்ட நிலையில் தோல்வியை தழுவியது.

இதைத்தொடர்ந்து 8வது டி20 உலகக் கோப்பை தொடர் தென்ஆப்பரிக்காவில் நடைபெறுகிறது. புள்ளிப்பட்டியலில் டாப் 10 இடங்களில் உள்ள பத்து அணிகள் இத்தொடரில் பங்கேற்கிறது.

குரூப் ஏ, குரூப் பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுகளில் 5 அணிகள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும். அதன்படி ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, தென்ஆப்பரிக்கா, இலங்கை அணிகள் குரூப் ஏ பிரிவிலும், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பிடித்துள்ளது.

இதில் இரண்டு பிரிவுகளிலும் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் பலப்பரிட்ச்சை செய்யும். இந்த தொடரில் நடக்க இருக்கும் போட்டிகள் அனைத்தும் கேப்டவுன், க்கெபெர்ஹா, பார்ல் ஆகிய மூன்று மைதானங்களில் நடைபெறுகிறது.

2010, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக 3 முறையும், 2018, 2020 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இருமுறையும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சாம்பியனாகவும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெற்றிகராமாக அணியாகவும் திகழ்ந்து வரும் ஆஸ்திரேலியாவின் வெற்றி பயணத்துக்கு அணைக்கட்டப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் இந்தியா இடம்பிடித்துள்ள குரூப் பி பிரிவில் பாகிஸ்தான் அணி இடம்பிடித்திருப்பதோடு, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகளும் உள்ளன. இதனால் இந்திய அணிக்கு அனைத்து போட்டிகளும் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டங்கள் கடந்த இருநாள்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி தென்ஆப்பரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையே கேப்டவுனில் இன்று நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி இந்தப் போட்டி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

இந்தியா அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை கேப்டவுன் மைதானத்தில் மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

 

WhatsApp channel

டாபிக்ஸ்