தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl: அடேங்கப்பா.. ரூ.951 கோடிக்கு ஏலம் போன மகளிர் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம்!

IPL: அடேங்கப்பா.. ரூ.951 கோடிக்கு ஏலம் போன மகளிர் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம்!

Manigandan K T HT Tamil
Jan 16, 2023 02:18 PM IST

ஆடவர் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டைப் போன்று மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு முதல் நடைபெறவுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள்
இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு ஐபிஎல் ஆட்டத்திற்கு ரூ.7.09 கோடி உரிமக் கட்டணம் என்ற விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமத்தை வயாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது.

மகளிர் இந்தியன் பிரீமியர் லீக் சீசன்கள் 2023 - 2027க்கான ஊடக உரிமைகளுக்கான டெண்டருக்கான ("ITT") அழைப்பை பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. ஒளிபரப்பு உரிமைகளுக்கான வெற்றிகரமான ஏலதாரர்களை நிர்ணயம் செய்வதற்கான ஏல செயல்முறை இன்று நடத்தப்பட்டது.

அதில் வயாகாம் 18 நிறுவனம் வெற்றி பெற்றது.

இதுதொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ கௌரவ செயலாளர் ஜெய் ஷா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "வாழ்த்துகள் வயாகாம் 18. பிசிசிஐ மற்றும் இந்திய மகளிர் அணி மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளதற்கு நன்றி. அடுத்த 5 ஆண்டுகளுக்கு (2023-27) ரூ. 951 கோடிகளுக்கு உரிமத்தை பெற்றுள்ளீர்கள். இது மகளிர் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய விஷயமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

டிஸ்னி, சோனி, ஜீ ஆகிய நிறுவனங்களும் ஏலத்தில் போட்டி போட்டன.

தொடக்க மகளிர் ஐபிஎல்லில் ஐந்து அணிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஐபிஎல் மகளிர் கிரிக்கெட் மார்ச் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் ஐபிஎல் வீராங்கனைகளின் ஏல விற்பனை வரும் பிப்ரவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் உரிமம் ரூ.48,390.05 கோடிக்கு ஏலத்தில் பெறப்பட்டது. ஓர் ஆட்டத்திற்கு ரூ.58 கோடி என்ற விகிதத்தில் உரிமம் பெறப்பட்டது.

WhatsApp channel

டாபிக்ஸ்