தமிழ் செய்திகள்  /  Sports  /  Ronaldo De Assis Moreira Brazilian Footballer Birth Day Today

HBD Ronaldinho: பிரேசில் கால்பந்து அணியின் 'G.O.A.T' ரொனால்டினோ பிறந்த நாள் இன்று.. தாய்நாட்டுக்காக எத்தனை கோல்?

Manigandan K T HT Tamil
Mar 21, 2024 06:30 AM IST

Ronaldinho: பிரேசில் தேசிய கால்பந்து அணிக்காக இவர் 1999 முதல் 2013 வரை 97 போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த அணிக்காக 33 கோல்களை பதிவு செய்துள்ளார். பிரேஸிலின் Porto Alegre இல் 1980 ஆம் ஆண்டு மார்ச் 21ம் தேதி பிறந்தார் ரொனால்டினோ. கால்பந்தை மிகவும் நேசிக்கும் தேசமான பிரேஸிலில் பிறந்தார் இவர்.

பிரேசில் முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டினோ
பிரேசில் முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டினோ (HT)

ட்ரெண்டிங் செய்திகள்

ரொனால்டினோ ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது அவருக்கு 43 வயதாகிறது. இன்று 44 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

பிரேசில் தேசிய கால்பந்து அணிக்காக இவர் 1999 முதல் 2013 வரை 97 போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த அணிக்காக 33 கோல்களை பதிவு செய்துள்ளார். பிரேஸிலின் Porto Alegre இல் 1980 ஆம் ஆண்டு மார்ச் 21ம் தேதி பிறந்தார் ரொனால்டினோ.

கால்பந்தை மிகவும் நேசிக்கும் தேசமான பிரேஸிலில் பிறந்த இவர் கால்பந்து வீரராக ஆகாமல் போயிருந்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும். போதா குறைக்கு இவரது தந்தை வேறு உள்ளூர் கால்பந்து கிளப் அணியில் விளையாடியவர். அப்பறம் என்ன, அப்பாவைப் போல் பிள்ளையும் கால்பந்தில் தீரா காதல் கொண்டார். காலம் கடந்தது. வாய்ப்புகள் காத்திருந்தது. தாய்நாட்டு கால்பந்து அணிக்காகவே விளையாடியது வரலாறாக மாறியது.

இவரது சகோதரரும் கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என முயற்சிகளை எடுத்தார். ஆனால், காயம் ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து கால்பந்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

அப்போது ரொனால்டினோவுக்கு வயது 8. இளம் வயதினர் விளையாடும் கிளப் அணியில் விளையாடியபோதே கலக்கியவர். ஒரு முறை உள்ளூர் ஆட்டம் ஒன்றில் தனது அணிக்காக 23 கோல்களை பதிவு செய்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து 'யார் இந்த பையன், பயங்கரமா விளையாடுறானே' என யோசிக்க வைத்தார்.

1997 யு-19 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெனால்டி கிக் முறையில் 2 கோல்களைப் பதிவு செய்ததன் மூலம், ரைஸிங் ஸ்டார் என்ற பெயரை எடுத்தார். பிரேசில் யு-17 அணிக்காக 13 ஆட்டங்களில் விளையாடி 3 கோல்களையும், பிரேசில் யு-20 அணிக்காக 17 ஆட்டங்களில் விளையாடி 8 கோல்களையும் பதிவு செய்துள்ளார்.

பிரேஸில் தேசிய அணிக்காக 97 ஆட்டங்களில் விளையாடி 33 கோல்களை பதிவு செய்துள்ளார் ரொனால்டினோ.

2008 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் பிரேசில் அணியை கேப்டனாக வழிநடத்தி வெண்கலப் பதக்கம் வென்று திரும்பினார் ரொனால்டினோ.

கிரெமியோ, பாரிஸ் செயின்ட்-ஜெர்மெயின், பார்சிலோனா, ஏசி மிலன், ஃபிளமெங்கோ, அட்லெடிகோ மினைரோ, கியூரெடரோ, ஃப்ளுமினென்ஸ் ஆகிய கிளப் அணிகளுக்காக விளையாடி மொத்தம் 205 கோல்களை அடித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டில், ரொனால்டினோவை ஒப்பந்தம் செய்ய ஆர்சனல் கிளப் ஆர்வம் காட்டியது, ஆனால் அவர் போதுமான சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத வீரர் என்பதால் பணி அனுமதி பெற முடியாததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. ஸ்காட்டிஷ் பிரீமியர் லீக் அணியான செயின்ட் மிர்ரெனுடன் லோனில் விளையாட அவர் கருதினார், ஆனால் அது ஒருபோதும் நடக்கவில்லை.

2001 ஆம் ஆண்டில், ரொனால்டினோ பிரெஞ்சு கிளப் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனுடன் € 5 மில்லியன் பரிமாற்றத்தில் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.  பாரிஸுக்கு வந்தவுடன், ரொனால்டினோவுக்கு 21 ஆம் எண் ஜெர்ஸி வழங்கப்பட்டது மற்றும் சக பிரேசிலிய அலோசியோ, மிட்பீல்டர் ஜே-ஜே ஒகோச்சா மற்றும் ஸ்ட்ரைக்கர் நிக்கோலஸ் அனெல்கா ஆகியோரை உள்ளடக்கிய ஒரு வரிசையில் சேர்க்கப்பட்டார்.

2018ஆம் ஆண்டில் அவர் ஓய்வை அறிவித்தார். இவரது ஜெர்ஸி எண் 10.

WhatsApp channel

டாபிக்ஸ்