தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Saina Nehwal: உங்கள் சாதனைக்கு ஒரு சல்யூட் சாய்னா.. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை!

HBD Saina Nehwal: உங்கள் சாதனைக்கு ஒரு சல்யூட் சாய்னா.. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை!

Manigandan K T HT Tamil
Mar 17, 2024 06:10 AM IST

Saina Nehwal: ஹரியாணா மாநிலம், ஹிசார் நகரில் 1990 ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி பிறந்தார் சாய்னா நெவால். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார் சாய்னா. உலக சாம்பியன்ஷிப், உபேர் கோப்பை, காமன்வெல்த் கேம்ஸ்களிலும் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.

பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெவால்
பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெவால்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியாவில் அவ்வளவு பிரபலமாகாத விளையாட்டாக இருந்த ஒன்று, சாய்னாவின் வருகைக்குப் பிறகு மிகப் பிரபலமானது.

பல பெற்றோர், சாய்னாவை போல் தங்கள் மகள் வர வேண்டும் என்று பாட்மிண்டன் பயிற்சி பள்ளியில் சேர்த்துவிடத் தொடங்கினார்கள்.

இவரது வாழ்க்கை கதை சாய்னா என்ற பெயரில் படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.

ஹரியாணா மாநிலம், ஹிசார் நகரில் 1990 ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி பிறந்தார் சாய்னா நெவால்.

தாயார் உஷா நெவால், தந்தை ஹர்வீர் சிங் நெவால் ஆகியோரும் பாட்மிண்டன் மீது காதல் கொண்டவர்கள்.

உஷா நெவால், ஹரியாணாவில் மாவட்ட அளவில் பேட்மிண்டன் போட்டியில் விளையாடியவர். பேட்மிண்டன் ரத்தம் என்பதாலோ என்னவோ சாய்னாவும் இந்த விளையாட்டையே தனது வாழ்க்கையாக எடுத்துக் கொள்ள முடிவு செய்தார்.

இவருக்கு சகோதரி உள்ளார். அவரது பெயர் சந்தரன்ஷு நெவால். வேளாண் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த தந்தை ஹைதராபாத்துக்கு பணி மாறுதல் அடைந்தார். அதனால், அவரது குடும்பமும் ஹைதராபாத்துக்கு இடம் பெயர்ந்தது.

லால் பகதூர் சாஸ்திரி பயிற்சி மையத்தில் சாய்னாவை பேட்மிண்டன் பயில்வதற்காக இவரது தாயார் சேர்த்துவிடுகிறார்.

அதன் பிறகு, தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து 5 மணி முதல் பயிற்சியை மேற்கொள்கிறார் சாய்னா.

பதக்கங்களை வென்ற சாய்னா

காமன்வெல்த் இளையோர் விளையாட்டு போட்டியில் தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தனிநபர் மற்றும் குழு பிரிவில் தங்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றார் சாய்னா.

2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார் சாய்னா. உலக சாம்பியன்ஷிப், உபேர் கோப்பை, காமன்வெல்த் கேம்ஸ்களிலும் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.

மற்றொரு இந்திய பேட்மிண்டன் வீரரான பாருபள்ளி காஷ்யப் தான் சாய்னாவின் கணவர். இவரும், சாய்னாவும் இளம்வயது முதலே நண்பர்கள்.

ஒருகட்டத்தில் காஷ்யப் மீது காதல் வயப்படும் சாய்னா, தனது பேட்மிண்டன் வாழ்க்கைக்காக காதலை ஒதுக்கி வைக்கிறார்.

பேட்மிண்டன் குறித்தும், சாய்னா என்ற பேட்மிண்டன் வீராங்கனை குறித்தும் அறிந்து கொள்ள சாய்னா படம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

புல்லேலா கோபிசந்தின் கீழ் கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்றார். 2014 ஆம் ஆண்டில், அவர் கோபிசந்துடன் பிரிந்து, பெங்களூரில் உள்ள பிரகாஷ் படுகோன் பேட்மிண்டன் அகாடமியில் சேர்ந்தார் மற்றும் யு. விமல் குமாரின் பயிற்சியின் கீழ் அவர் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆனார்; பின்னர் 2017ல் கோபிசந்தின் கீழ் பயிற்சிக்கு மீண்டும் திரும்பினார்.

பத்மஸ்ரீ, பத்ம பூஷண், ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா ஆகிய பெருமைமிக்க விருதுகளை வென்ற சாய்னாவின் வாழ்க்கை வரலாறும் விளையாட்டும் இளம்பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் சாதனைகளுக்காக சல்யூட் சாய்னா! இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

WhatsApp channel

டாபிக்ஸ்