Dani Alves: பாஸ்போர்ட் ஒப்படைப்பு! பாலியல் வழக்கில் பிரேசில் கால்பந்து வீரர் ஜாமினில் விடுவித்த ஸ்பெயின் நீதிமன்றம்
நைட் கிளப்பில் பெண் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பிரபல பிரேசில் கால்பந்து வீரர் டேனி ஆல்வ்ஸுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகள், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது மேல்முறையீட்டில் அவருக்கு ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க பிரேசில் வீரர் டேனி ஆல்வ்ஸ் முன்வந்த நிலையில், ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் அவரை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் ஜாமினில் இருந்து விடுவிப்பதற்காக ஒரு மில்லியன் யூரோ செலுத்தினார் ஆல்வ்ஸ்
அத்துடன் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராகவும் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவரை ஜாமினில் விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
பாலியல் துன்புறுத்தல் வழக்கு
கடந்த 2022ஆம் ஆண்டில் நைட் கிளப் ஒன்றில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் ஆல்வ்ஸ், பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தலும் அளித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் ஆல்வ்ஸ் குற்றவாளி என கடந்த பிப்ரவரி மாதம் நிருபிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு 4 ஆண்டு, 6 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த 2023 ஜனவரியில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆல்வ்ஸ், அப்போது இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி பல முறை அவர் தாக்கல் செய்த மனுக்கள் நிரகரிக்கப்பட்டன. அவரை விடுவித்தால் நாட்டை விட்டு தப்பி செல்லும் ஆபத்து இருப்பதாக கருதி நீதிமன்றம் ஆல்வ்ஸுக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து தற்போது ஜாமினுக்கான பிணை தொடைகயும், தனது பிரேசில் மற்றும் ஸ்பெயின் நாட்டு பாஸ்போர்ட்களை அவர் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்த நிலையில் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது
இதற்கிடையே ஆல்வ்ஸ்க்கு விதிக்கப்பட்டிருக்கும் சிறை தண்டனையை 9 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் முறையிடப்பட்டது. இதுதொடர்பான விசாரணை மாட்ரிட் நகரிலுள்ள உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்ககூடும் என தெரிகிறது.
டேனி ஆல்வ்ஸ்
பிரேசில் நாட்டு கால்பந்து வீரரான ஆல்வ்ஸ் அந்த நாட்டின் தேசிய அணிக்காக 2006 முதல் 2022 வரை விளையாடியுள்ளார். தடுப்பாட்ட வீரரான இவர் ஸ்பெயின் உள்ளூர் கால்பந்து லீக்கில் நட்சத்திர கால்பந்து அணியான பார்சிலோனாவுக்கு எதிராக விளையாடி வருகிறார்.
பார்சிலோனா அணியால் 32.5 மில்லியன் யுரோக்களால் வாங்கப்பட்ட இவர், அதிக சம்பளத்தை பெறும் தடுப்பாட்ட வீரராக இருந்து வருகிறார். UEFA சூப்பர் கோப்பை, FIFA கிளப் உலகக் கோப்பை, லா லீகா கோப்பை 5 முறை, UEFA சாம்பியன்ஸ் லீக் டைட்டில் இரண்டு முறை வென்றுள்ளார். பிரேசில் அணிக்காக அதிக போட்டிகள் விளையாடிய வீரராகவும் இருந்து வருகிறார்.
டேனி ஆல்வ்ஸ் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு மட்டும் இல்லை. 2023இல் இவர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில் அதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்ப்டுள்ளது.
அதேபோல், பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆல்வ்ஸ், சிறையின் உள்ளே தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகின. தற்போது அவருக்கு ஜாமின் கிடைத்தபோதிலும் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவர் தனது கால்பந்து விளையாட்டி கேரியரில் மொத்தமாக 67 கோல்கள் அடித்துள்ளார்.
டாபிக்ஸ்