Womens Day Special: சாதிக்க வயது தடையில்லை! 62 வயதில் 60 வகையான சிறுதானிய உணவு பொருள்கள் தயாரிக்கும் தேனி பெண்மணி
எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி கிடக்க வேண்டும். பல்வேறு தொழிகள் கற்றுத்தரப்படுகின்றன. எனவே அதில் பயனடைந்து தொழில் முனைவோர் ஆகுங்கள் என ஆளுநரிடம் விருது பெற்ற பின்பு தொழில்முனைவோராக திகழ்ந்த வரும் ரெஜினா பேசினார்.
வாஹின் என்ற பெயரில் 12 பெண்களை வைத்து சுய உதவிக் குழு நடத்தி, அதன் மூலம் தாவரம் மற்றும் இயற்கை அடிப்படையிலான வாழ்வாதாரத்தை உருவாக்கி வருகிறார் தேனி மாவட்டத்தை சேர்ந்த 62 வயதாகும் ரெஜினா. பொதுவாக இந்த வயதில் இளைப்பார வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருந்து வரும் சூழலில், அர்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் பெண்களின் சுயமுன்னேற்றத்துக்கு முன் மாதிரியாக இவர் இருந்து வருகிறார்.
தனது குழு உதவியுடன் கேரட் மால்ட், பீட்ரூட் மால்ட், வாழைப்பழ மால்ட், தினை புட்டுப் பொடி, தர்பூசணி விதை மசாலா, பீட்ரூட் தேன், நெல்லி மிட்டாய் உள்பட பல்வேறு உணவு பொருள்களை தயாரித்து வருகிறார். இந்த உறுதியான தயாரிப்புகளுடன், சகோதரித்தனத்துவம் மூலம் பலரது கனவுகளை ஒன்றிணைத்து சிறந்த சூழலையும் வளர்த்து வருகிறார்.
60 வகையான சிறுதானிய உணவு பொருள்களை தயாரித்து தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்து வருகிறார். பிரதமர் திட்டத்திலும் ரூ. 15 லட்சம் கடனுதவி பெற்று 11 எந்திரங்களை வாங்கி தொழில் செய்து வருகிறார்.
#SheTheDifference என்பதை உருவாக்கும் நோக்கில் Andanana- The Coca-Cola India Foundation மற்றும் KVK CENDECT ஆகியவற்றுடன் இணைந்து, ரெஜினாவின் குழு வாழ்க்கையை உருமாற்றம் செய்யும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் மாதத்துக்கு கூட்டாக ரூ. 30 ஆயிரம் வரை வருமானம் பெற்றது தங்களது வாழ்வாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை இந்த குழு அடைகிறது.
இந்த வருமானமானது அந்த குழுவை சேர்ந்த பெண்களின் வீட்டு செலவுகளுக்கும், குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கும் பயன் தருகின்றன. இவர்களின் கூட்டு முயற்சி கிராமத்தில் அனைத்து பகுதிகளிலும் எதிரொலிக்கும் விதமாக அமைந்துள்ளது.
ரெஜினா, தனது மகள் ஹேமாவுடன் இணைந்து தன்னை போலவே பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட ஐந்து பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் விதமாக சிறிய அளவில் நிறுவனம் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். அந்த பெண்களின் வளர்ச்சிக்காக ரெஜினாவின் அர்ப்பணிப்பு தொழில்முறைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. தங்களது தயாரிப்புகளை கவனமாக உருவாக்கி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களின் வீடுகளையும் சென்றடைகிறது
இந்த வயதிலும் தொழில்முனைவோராக ரெஜினாவின் மேற்கொண்டிருக்கும் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு தகுதியான அங்கீகாரமும் கிடைத்துள்ளது. ‘சிறந்த பெண் தொழில்முனைவோர் விருதை’ ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் அவருக்கு வழங்கியுள்ளார்.
ரெஜினாவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த கெளரவம் அவரது தனிப்பட்ட சாதனைகளை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், தொழில்முனைவோராக பெண்களின் அளிக்கும் விலைமதிப்பற்ற பங்களிப்பை அடிக்கோடிட்டு காட்டுவதாக அமைந்துள்ளது.
பெண்களின் போராட்டங்கள் பெரும்பாலும் நிழல்களின் மௌனத்தில் எதிரொலிக்கும் உலகில், 62 வயதில் ரெஜினா, நம்பிக்கையின்மைக்கு எதிராக ஒரு போரை நடத்துகிறார். அவரது கண்ணீர், அவரது வெற்றிகள் மற்றும் SHG-Vahin இன் கூட்டு இதயத் துடிப்பு ஆகியவற்றின் மூலம், ரெஜினா, வயது ஒரு வரம்பு அல்ல, மாறாக நம்பிக்கையின் கதைகளை வரைவதற்கு ஒரு கேன்வாஸ் என்பதை நிரூபித்து வருகிறார்.
தன்னை தொழில்முனைவோர் மாற்றயதில் Andanana- The Coca-Cola India Foundation மற்றும் KVK CENDECT ஆகியவை சிறந்த அடித்தளமாக இருந்தது எனவும், தனது பொருள்கள் பரவலாக வாடியைாளர்களை பெறுவதற்கு உதவிகராமாக இருந்ததாகவும் தெரிவித்த ரெஜினா, தங்களது உற்பத்தி முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கு தேவையான திறன்களை பெறுவதற்கும் உதவிகரமாக இருந்ததாக தெரிவித்தார்.
எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி கிடக்க வேண்டும். பல்வேறு தொழிகள் கற்றுத்தரப்படுகின்றன. எனவே அதில் பயனடைந்து தொழில் முனைவோர் ஆகுங்கள் எனவும் ஊக்கப்படுத்தும் வார்த்தைகள் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்