தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Surya Kanguva Movie Teaser To Be Release Tomorrow

Kanguva Update: வெயிட்டிங் ஓவர்.. அதிரடியாக மாஸ் கிளப்பும் வகையில் வருகிறது கங்குவா டீஸர்!

Aarthi Balaji HT Tamil
Mar 18, 2024 10:05 AM IST

Kanguva Movie: நடிகர் சூர்யாவின் கங்குவா பட டீஸர் நாளை ( மார்ச் 19 ) 4.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

கங்குவா
கங்குவா

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் சூர்யாவின், கங்குவா படம் பத்து மொழிகளில் பான் வேர்ல்ட் படமாக உருவாகி வருகிறது. உலகத்தரம் வாய்ந்த மேக்கிங்கும், சூர்யாவின் நடிப்பும், ' கங்குவா ' படத்தில் சிறப்பம்சமாக இருக்கும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். 

நடிகர் சூர்யாவின் கேரியரில் அதிக பட்ஜெட் படமாக உருவாகி வரும், 'கங்குவா' இந்திய வெள்ளித்திரையில் ஒரு சிறப்புப் படமாக உருவாக உள்ளது. கங்குவா படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள். 3 டியிலும் 'கங்குவா' பார்வையாளர்கள் முன் வர உள்ளது.

கங்குவா நடிகர்கள்

கங்குவா படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் நடித்து உள்ளனர். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய, சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி செய்கிறார். 

அதோடு, கங்குவா படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நிஷாத் யூசுப் எடிட்டர் என்றால் படத்திற்கு சிவாவும், ஆதி நாராயணனும் கதை வழங்கி உள்ளனர். மதன் கார்கே வசனங்கள், விவேக், மதன் கார்கே பாடல்கள் எழுதி உள்ளனர்.

கே. இ. ஞானவேல் ராஜா, வம்சி மற்றும் பிரமோத் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு உள்ள கங்குவா திரைப்படத்தில் ஏ.ஜே.ராஜா நிர்வாக தயாரிப்பாளராகவும், நேஹா ஞானவேல் ராஜா இணை தயாரிப்பாளராகவும் உள்ளனர். 

கங்குவா பெயர் அர்த்தம்

கங்குவா என்றால் நெருப்பு சக்தி கொண்டவன் என்று பொருள். ஒப்பற்ற வலிமை வாய்ந்தது என்று பொருள். 14 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட, கங்குவா என்ற போர்வீரனின் கற்பனைக் கதை சொல்லப்படும். இது இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சூர்யா ஒரே நேரத்தில் ஐந்து விதமான வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கங்குவா அப்டேட்

 ‘கங்குவா’ படத்திற்காக சூர்யா ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களுக்காவே சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியீட்டு உள்ளது. அதன் படி,  கங்குவா படத்தின் டீஸர் நாளை ( மார்ச் 19 ) 4.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

கங்குவா படத்தின் டீஸர் லுக் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே பெரும் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு வெகுவாக அதிகரித்து உள்ளது.

இரண்டாவது தோற்றத்தில், சூர்யா இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் காணப்பட்டார். நெருப்பில் எரியும் பறவை பின்னணியில் தென்படும் போது.. அதன் முன் சூர்யா மிக உக்கிரமான தோற்றத்தில் இருக்கிறார். அதற்குப் பின்னால் சூர்யாவின் மற்றொரு தோற்றமும் காணப்பட்டது. நாளை ( மார்ச் 19 ) வெளியாகும் டீஸரை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்