தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Psl 2023:வாணவேடிக்கையால் பற்றி எரிந்த மின்விளக்கு - பிஎஸ்எல் போட்டியில் பரபரப்பு

PSL 2023:வாணவேடிக்கையால் பற்றி எரிந்த மின்விளக்கு - பிஎஸ்எல் போட்டியில் பரபரப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 14, 2023 12:20 PM IST

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தொடக்க விழாவின்போது நிகழ்ந்த வாணவேடிக்கை கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்து மைதானத்தில் இருந்த மின்விளக்கு தீபற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைதானத்தில் இருந்த மின் விளக்கில் பற்றி எரிந்த தீ அணைக்கப்படும் காட்சி
மைதானத்தில் இருந்த மின் விளக்கில் பற்றி எரிந்த தீ அணைக்கப்படும் காட்சி

ட்ரெண்டிங் செய்திகள்

பாகிஸ்தானிலுள்ள முல்தானில் இருக்கும் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் மைதானத்தில் இருந்த மின்விளக்கில் தீப்பிடித்த எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தால் ஏற்பட்ட குழப்பம், சலசலப்புக்கு பின்னர் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்கள் இடையிலான போட்டி 30 நிமிடம் காலதாமதமாக தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் லாகூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

முன்னதாக, இந்த போட்டி தொடங்குவதற்கு முன் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதில் வெடி வென்று மின் விளக்கு மீது மோதி வெடித்தது. இதன் ஏற்பட்ட தீபொறி மின் விளக்கில் பற்றி எரிந்துள்ளது. பின்னர் உடனடியாக மின்விளைக்குகள் ஒளிருவது நிறுத்தப்பட்டு, தீ அணைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மின் விளக்குகள் சரி செய்யப்பட்டு, போட்டி காலதாமதமாக தொடங்கப்பட்டது. மின் விளக்கு பற்றி எரியும் விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

டாஸ் போடுவதற்கு முன்னரே இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், உடனடியாக சரி செய்யப்பட்டது. இதில் யாருக்கும் காயமும், பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு அணிகள் பங்கேற்கும் பிஎஸ்எல் தொடரில் பாகிஸ்தான் அணி நட்சத்திர வீரர்கள் பலரும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகிறார்கள். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பரிக்கா அணி வீரர்களும் இந்த தொடரில் விளையாடுகிறார்கள்.

பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் சோனி டிவியில் கண்டுகளிக்கலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்