தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ramiz Raja About Asia Cup : ‘பாகிஸ்தான் கட்டாயம் வெளியேறும்’ ரமிஸ் ராஜா காட்டம்!

Ramiz Raja About Asia Cup : ‘பாகிஸ்தான் கட்டாயம் வெளியேறும்’ ரமிஸ் ராஜா காட்டம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 02, 2022 07:38 PM IST

‘பாகிஸ்தான்- இந்தியா விளையாடுவதை ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்’ -ரமிஸ் ராஜா

ரமீஸ் ராஜா
ரமீஸ் ராஜா

ட்ரெண்டிங் செய்திகள்

பிசிபி தலைவர் ரமிஸ் ராஜா கூறுகையில், ‘‘இந்தியாவிற்கு  செல்லாத காரணத்திற்காக பாகிஸ்தான் ஹோஸ்டிங் உரிமையை திரும்பப் பெற்றால், 2023 ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலிக்கலாம்.

ஆசிய கோப்பை போட்டி நடத்துவது பாகிஸ்தானிடம் இருந்து பறிக்கப்பட்டால், நாங்கள்தான் வெளியேறுவோம். அக்டோபரில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய வாரியத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பிறகு, ‘ஆசியா கோப்பை 2023, பொதுவான  இடத்தில் நடைபெறும்’ என்று கூறியிருந்தார்.

அதற்கு காரணம், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது.  ஷாவின் கருத்துக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, முன்னாள் பிசிசிஐ தலைவரான இந்தியாவின் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர், பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பயணம் அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையைப் பொறுத்தது என்றார்.

2008ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைக்காக இந்தியா கடைசிப் பாகிஸ்தானுக்கு பயணம் சென்றது, அதே சமயம் பாகிஸ்தான் கடைசியாக 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்காக இந்தியா வந்தது. 2012-13ல் பாகிஸ்தான்  அணி வெள்ளை பந்து தொடருக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தது.  இருதரப்பிலும் கிரிக்கெட் இல்லாத அரசியல் உறவுகளின் காரணமாக, ஏசிசி மற்றும் ஐசிசி நிகழ்வுகளில் மட்டுமே  இரு அணிகளும் ஒருவருக்கொருவர் விளையாடியுள்ளன. 

2022 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஆசியக் கோப்பையின் போது அவர்கள் இரண்டு முறையும், அக்டோபரில் மெல்போர்னில் நடந்த டி20 உலகக் கோப்பையிலும் ஒருமுறை விளையாடினர்.

 இருதரப்பு கிரிக்கெட் தொடர்பான சிக்கல்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் ஆசியக் கோப்பை பல நாடுகளின் போட்டியாகும், இது ஆசிய அணிகளுக்கு உலகக் கோப்பை போன்றது. அதை நடத்தும் பொறுப்பை எங்களிடம் முதலில் வழங்கிவிட்டு, பின்னர் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய மாட்டோம் என்று ஏன் அறிக்கை வெளியிட வேண்டும்? அரசாங்கம் வர அனுமதிக்காததால் இந்திய அணி வராது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஆசிய கோப்பையை வெல்லவேண்டுமென்றால், விலகி இருப்பது சரியல்ல.

அடுத்த ஆண்டு ஆசிய கோப்பையை பாகிஸ்தானில் இருந்து வேறு  இடத்திற்கு மாற்றுவது அரசியல் சூழ்நிலைகளுக்கு சரியாக இருக்காது. இருதரப்பும், இரு நாடுகளிலும் விளையாட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் . 

​​இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடவில்லை என்றால் போட்டி இல்லை. நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். இந்தியாவை நான் எப்போதும் நேசிக்கப்படுகிறேன்; நான் பல ஐபிஎல் பதிப்புகளுக்கு வர்ணனை செய்துள்ளேன். பாகிஸ்தான்- இந்தியா விளையாடுவதை ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். 

உலகக் கோப்பையில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். 90 ஆயிரம் ரசிகர்கள் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண வந்திருந்தார்கள். இது சிக்கலான நேரம். அடுத்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை போட்டி, இந்தியாவில் அக்டோபர்-நவம்பரில் நடைபெறவுள்ளது. அது தொடர்பாக ஏற்கனவே பாகிஸ்தான் சில விசயங்களை முன்னெழுப்பியுள்ளது.  ஆசிய கோப்பை பாகிஸ்தானுக்கு வெளியே மாற்றப்பட்டால் கண்டிப்பாக நாங்கள் அதிலிருந்து வெளியேறுவோம்,’’ என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் அரசாங்கம் பாகிஸ்தானை இந்தியாவிற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? என்று கேள்வி எழுப்பி போது, "இது மிகவும் உணர்ச்சிகரமான விஷயமாகும். விவாதம் பிசிசிஐயால் தொடங்கப்பட்டது. நாங்கள் பதிலளிக்க வேண்டியிருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தேவை."

என்று அந்த பேட்டியில் ரமிஸ் ராஜா பதிலளித்திருந்தார். 

WhatsApp channel

டாபிக்ஸ்