தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Viral Video: 'மீசை வச்ச குழந்தையப்பா' தமிழக வீரர் நடராஜனின் மகளுடன் விளையாடும் தோனி!

Viral Video: 'மீசை வச்ச குழந்தையப்பா' தமிழக வீரர் நடராஜனின் மகளுடன் விளையாடும் தோனி!

Karthikeyan S HT Tamil
Apr 22, 2023 11:57 AM IST

MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி, தமிழக வீரர் நடராஜனின் மகளுடன் விளையாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக வீரர் நடராஜனின் குடும்பத்தினரை சந்தித்த தோனி.
தமிழக வீரர் நடராஜனின் குடும்பத்தினரை சந்தித்த தோனி.

ட்ரெண்டிங் செய்திகள்

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் டெவான் கான்வே 77 ரன்கள் விளாசி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதன் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது.

இந்தப் போட்டி முடிந்த பிறகு, சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, ஐதராபாத் அணியின் இளம் வீரர்களோடு சிறிது நேரம் உரையாடினார். இதனைத் தொடர்ந்து ஐதராபாத் அணியின் பயிற்சியாளர்களான பிரையன் லாரா மற்றும் டேல் ஸ்டையின் ஆகியோரை தோனி சந்தித்தார். பின்னர் ஐதராபாத் அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் தனது ஜெர்சியில் தோனியின் கையெழுத்தை பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழக வீரர் நடராஜனின் குடும்பத்தினரையும் தோனி சந்தித்தார். நேற்றையப் போட்டியில் நடராஜன் களமிறங்காத நிலையில், போட்டி முடிந்த பிறகு நடராஜன் தோனியை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது நடராஜனின் மகளுடன் தோனி சிறிது நேரம் விளையாடினார். அந்த வீடியோ தற்போது சமூலவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக தோனி கூறுகையில், "என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது. அதை மகிழ்ச்சியாக கடப்பது முக்கியமானது. சென்னைக்கு வருவது மிகவும் மகிழ்ச்சி. ரசிகர்கள் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். என் பேச்சை கேட்க சென்னை ரசிகர்கள் கடைசி வரை இருக்கின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்