தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  ஒரு சிக்ஸர் கூட அடிக்காத டி20 போட்டி...பிட்ச் பராமரிப்பாளர் அதிரடி மாற்றம்

ஒரு சிக்ஸர் கூட அடிக்காத டி20 போட்டி...பிட்ச் பராமரிப்பாளர் அதிரடி மாற்றம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 31, 2023 11:47 AM IST

Ind vs NZ t20:மொத்தம் விளையாடப்பட்ட 239 பந்துகளில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கப்படாத முதல் ஆட்டமாக அமைந்தது இந்தியா - நியூசிலாந்து இடையே லக்னெளவில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டி. கடைசி நேரத்தில் இந்திய அணி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பிட்சை மாற்றி அமைத்த பராமரிப்பாளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லக்னெளவில் நடைபெற்ற டி20 போட்டியில் நியூசிலாந்து விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்
லக்னெளவில் நடைபெற்ற டி20 போட்டியில் நியூசிலாந்து விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கு முக்கிய காரணமாக ஆடுகளத்தின் தன்மை அமைந்திருந்தது. ஸ்பின்னர்களுக்கு நன்கு திரும்பும் விதமாக பிட்ச் செயல்பட்ட நிலையில் இந்தப் போட்டியில் மொத்த 30 ஓவர்களை இரு அணிகளை சேர்ந்த ஸ்பின்னர்களே வீசியுள்ளனர்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு அந்தோ பரிதாப நிலைதான். 20 ஓவர் முழுமையாக பேட் செய்து 100 ரன்கள் கூட எட்டாமல் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய ஸ்பின்னர்களான வாஷிங்டன் சுந்தர், சஹால், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் மட்டும் 13 ஓவர்கள் வீசி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து இலக்கை விரட்டிய இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக நியூசிலாந்து அணியிலிருந்து மிட்செல் சாண்ட்னர், சோதி, மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் பகுதி நேர பந்துவீச்சாளர்களான சாப்மேன், பிலிப்ஸ் ஆகியோரின் வைத்து 17 ஓவர்கள் வீசப்பட்டன.

இந்தப் போட்டியில் மொத்த 239 பந்துகள் வீசப்பட்ட நிலையில், ஒரு சிக்ஸர் கூட இரு அணிகளின் பேட்ஸ்மேன்கள் யாரும் அடிக்கவில்லை. இப்படியொரு நிகழ்வு முதல் முறையாக டி20 போட்டிகளில் அரங்கேறியுள்ளது.

கடைசி நேரத்தில் எப்படியோ சூர்யகுமார் யாதவ் பவுண்டரி மூலம் இந்தியா இலக்கை எட்டி வெற்றி பெற்றதோடு, தொடரையும் இழக்காமல் தவிர்த்தது.

போட்டி முடிந்த பிறகு பிட்ச் குறித்து அதிர்ச்சி தெரிவித்த இந்திய கேப்டன் பாண்ட்யா, பிட்ச் பராமரிப்பாளர்கள் கொஞ்சம் முன்னதாகவே ஆடுகளத்தை தயார் செய்திருக்க வேண்டும். இது டி20 போட்டி விளையாடுவதற்கு உகந்த ஆடுகளமாக இல்லை என கூறினார்.

இதற்கிடையே இந்த போட்டிக்காக இரண்டு ஆடுகளங்கள் கருப்பு மணலில் தயார் செய்யப்பட்டிருந்ததாகவும், போட்டி தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன் வேறு ஆடுகளத்தை மாற்றுமாறு இந்திய அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதால் சிவப்பு மணலில் புதிய ஆடுகளம் உருவாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மிக குறுகிய காலத்தில் இந்த புதிய ஆடுகளம் தயார் செய்யப்பட்டதால் மிகவும் மெதுவாக இருந்ததாக கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் பிசிசிஐ அதிருப்தி அடைத்த நிலையில், தற்போது லக்னெள மைதானத்தின் புதிய பிட்ச் பராமரிப்பாளராக குவாலியரை சேர்ந்த சஞ்சீவ் அகர்வால் என்பரை நியமித்துள்ளது.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உள்ளூர் ஆடுகளமாக இந்த மைதானம் இருக்கபோவதால், இதுபோன்று உதவாக்கரை பிட்ச் சரியாகாது என கருதி பிசிசிஐ அதிரடி மாற்றத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் நாளை நடைபெறுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்