தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Washington Sundar: காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர்! சன்ரைசர்ஸ்க்கு பின்னடைவு

Washington Sundar: காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர்! சன்ரைசர்ஸ்க்கு பின்னடைவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 27, 2023 12:50 PM IST

இதுவரை விளையாடிய போட்டிகளில் பெரிய அளவில் ஜொலிக்காத போதிலும் சன் ரைசர்ஸ் அணியின் முக்கிய வீரராகவே இருந்து வந்த வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரை விட்டு விலகியுள்ளார்.

ஐபிஎல் 2023 தொடரிலிருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர்
ஐபிஎல் 2023 தொடரிலிருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக சன் ரைசர்ஸ் அணி அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதோடு, விரைவில் அவர் குணமடைய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பவர்ப்ளே ஓவர்களில் கட்டுப்பாடுடன் பெளலிங் செய்யும்

வாஷிங்டன் சுந்தர் , ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையும் ஏற்படுத்தியுள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் அதிரடியாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபடுவதிலும், அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல கூடியவராகவும் இருந்துள்ளார்.

ஆனால் வாஷிங்டன் சுந்தருக்கு 2023 சீசன் தற்போது வரை மிகவும் மோசமாகவே அமைந்துள்ளது. சன் ரைசர்ஸ் அணி விளையாடி அனைத்து போட்டிகளிலும் பங்கேற்ற வாஷிங்டன் சுந்தர் பெளலிங்கில் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

அதேபோல் பேட்டிங்கில் மொத்தமாக 60 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோராக 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த சூழ்நிலையில் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு சீசனில் இருந்து விலகியுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஆல்ரவுண்ரான வாஷிங்டன் சுந்தர் கடந்த சீசனில் முக்கிய வீரர்களுள் ஒருவராக இருந்தார். ஆனால் இந்த சீசனில் அவர் எதிர்பார்த்த அளவில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் பார்ம் இன்றி தவித்து வருகிறார்.

இதேபோல் போல் சன்ரைசர்ஸ் அணியில் மற்றொரு தமிழ்நாடு வீரரான யார்க்கர் கிங் நடராஜனும் இந்த சீசனில் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக இருந்து வருகிறார்.

வாஷிங்டன் சுந்தருக்கான மாற்று வீரர் யார் என்பதை சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை. இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் அணி 2 வெற்றிகளை மட்டும் பெற்றுள்ளது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

ஐபிஎல் தொடர் பாதி கட்டத்தை கடந்திருந்து இந்த வேலையில் வாஷிங்டன் விலகல் சன் ரைசர்ஸ் அணிக்கு பின்னடைவாகவே அமைந்துள்ளது. இனி வரும் 7 போட்டிகளில் குறைந்தது 5 போட்டிகளில் வெல்ல வேண்டிய நெருக்கடி நிலையில் சன் ரைசர்ஸ் அணி உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்