தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Rcb Vs Lsg: மைதானத்தையும் தாண்டி பறந்த 115 மீ இமாலய சிக்ஸர்! அரண்டு போன கோலி

RCB vs LSG: மைதானத்தையும் தாண்டி பறந்த 115 மீ இமாலய சிக்ஸர்! அரண்டு போன கோலி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 11, 2023 11:33 AM IST

லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி கேப்டன் டூ ப்ளெசிஸ் அடித்த இமாலய சிக்ஸர் மைதானத்தை தாண்டி வெளியே பறந்துள்ளது. இந்த சீசனில் அதிக தூரம் அடித்த சிக்ஸராக இது அமைந்துள்ளது.

டூ பிளெசிஸ் அடித்த சிக்ஸரை பார்த்து அரண்டுபோன விராட் கோலி
டூ பிளெசிஸ் அடித்த சிக்ஸரை பார்த்து அரண்டுபோன விராட் கோலி

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னதாக, இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 212 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் டூ ப்ளெசிஸ் 79 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் 14.3 ஓவரில் ரவி பிஷ்னோய் வீசிய பந்தை இமாலய சிக்ஸருக்கு பறக்கவிட்டார் டூ ப்ளெசிஸ்.

மைதானத்தையும் தாண்டி 115 மீட்டர் சென்ற அந்த சிக்ஸர் தற்போது வரை இந்த சீசனில் அடிக்கப்பட்ட மிக தூரமான சிக்ஸராக மாறியுள்ளது. இந்த சிக்ஸரை அடித்தபோது எதிரில் நான் ஸ்டைக்காராக இருந்த கிளென் மேக்ஸ்வேல் பிரமித்துபோய் பார்த்து சிரித்தார்.

அதேபோல் விராட் கோலியும் டக்கவுட்டில் இருந்தபடி டூ ப்ளெசிஸ் சிக்ஸர் பார்த்து அரண்டுபோய் கண்களை விரித்தபடி பார்த்தார்.

ஐபிஎல் போட்டிகளில் நீண்ட தூரம் சிக்ஸர் விளாசியதில் முதல் இடத்தில் சிஎஸ்கே வீரர் ஆல்பி மோர்கல் உள்ளார். இவர் 125 மீட்டர் தூரம் சிக்ஸரை பறக்கவிட்டுள்ளார். இரண்டாவது இடத்தில் ப்ரவீன் குமார் (124 மீட்டர்), மூன்றாவது இடத்தில் ஆடம் கில்கிறிஸ்ட் (122 மீட்டர்) ஆகியோர் உள்ளனர்.

சர்ப்ரைசிங்காக இந்த லிஸ்டில் உள்ள டாப் 10 வீரர்கள் பட்டியலில் எம்எஸ் தோனி, விராட் கோலி, சச்சின் டென்டுல்கர் உள்பட டாப் பேட்ஸ்மேன்கள் இடம்பெறவில்லை.

WhatsApp channel

டாபிக்ஸ்