தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  David Warner: கோலி,டூப்ளெசிஸ்,கேஎல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, சாம்சன் வரிசையில் இணைந்த வார்னர்

David Warner: கோலி,டூப்ளெசிஸ்,கேஎல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, சாம்சன் வரிசையில் இணைந்த வார்னர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 26, 2023 12:39 PM IST

ஆர்சிபி அணியின் இந்த சீசனில் வழிநடத்தும் பாப் டூ ப்ளெசிஸ், விராட் கோலி, லக்னோ கேப்டன் கேஎல் ராகுல், குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஸ்லோ ஓவர் ரேட்டுக்கு கப்பம் கட்டும் கேப்டனாக இணைந்துள்ள டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர்.

ஸ்லோ ஓவர் ரேட்டுக்காக கப்பம் கட்டும் அடுத்த கேப்டனாகியுள்ள டேவிட் வார்னர்
ஸ்லோ ஓவர் ரேட்டுக்காக கப்பம் கட்டும் அடுத்த கேப்டனாகியுள்ள டேவிட் வார்னர் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து தனது கடைசி போட்டியில் சன் ரைசரஸ் அணியை அதன் உள்ளூர் மைதானமான ஹைதராபாத்தில் வைத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் பேட் செய்த டெல்லி அணி அடித்தது 144 ரன்கள் என்றாலும், பெளலர்களின் சிறப்பான பந்துவீச்சால் அந்த ரன்களையும் சேஸ் செய்ய விடாமல் 137 ரன்களில் கட்டுப்படுத்தியது.

என்னதான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று டெல்லி கேபிடல்ஸ் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், குறித்த நேரத்தி பந்து வீசாமல் காலம் தாழ்த்தி பெளலிங் செய்து ஐபிஎல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லி அணி கேப்டன் வார்னருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

"ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் குறித்த நேரத்தில் பந்து வீசி முடிக்கவில்லை. அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதல் முறையாக ஸ்லோ ஓவர் ரேட்டில் ஈடுபட்டுள்ளதால் அவருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக" ஐபிஎல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இதுபோன்ற கப்பம் கட்டும் கேப்டனகளில் ஆர்சிபி அணியை வழிநடத்திய பாப் டூ ப்ளெசிஸ், விராட் கோலி, லக்னோ கேப்டன் கேஎல் ராகுல், குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு அடுத்த வார்னரும் இணைந்துள்ளார்.

டெல்லி அணி தனது அடுத்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் சனிக்கிழமை அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்