தமிழ் செய்திகள்  /  Sports  /  Indian Women Cricket Team Wins Silver

commonwealth games 2022: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வெள்ளிப்பதக்கம்

I Jayachandran HT Tamil
Aug 08, 2022 03:04 PM IST

22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் நிச்சயம் தங்கப்பதக்கத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இறுதிப்போட்டியில் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் பெத் மூனே 61 ரன்களும் கேப்டன் மேக் லானிங் 36 ரந்களும் ஆஷ்லீக கார்ட்னர் 25 ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தியா சார்பில் ரேணுகா சிங், ஸ்னே ராணா தலா 2 விக்கெட்டுகளைக் குவித்தனர்.

8.01 என்ற ரன் ரேட் இலக்கை வைத்து இந்தியா பேட்டிங்கைத் தொடர்ந்தது. ஆனால் ஸ்மிருதி மந்தனா 6 ரன்களும் ஷபாலி வர்மா 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 ரன்களை எடுத்து ஆறுதல் தந்தார். தொடர்ந்து பூஜா வெறும் 1 ரன் எடுத்து அவுட் ஆனார்.

இருப்பினும் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 43 பந்தில் 2 சிக்சர், 7 பௌண்டரிகளை விளாசி 65 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார். அதன்பின் தீப்தி சர்மா 13 ரன்கள், ஸ்னே ராணா 8 ரன்கள், ராதா யாதவ் 1 ரன் எடுத்து களத்தை விட்டு வெளியேறினர்.

இறுதி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. ஜெஸ் ஜோனாசன் வீசிய அந்த ஓவரில் மேக்னா சிங் 1, யஸ்திகா பா்யா 2 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். 19.3 ஓவரில் 152 ரன்களை மட்டும் எடுத்து இந்தியா ஆல்அவுட் ஆனது. இந்தப் போட்டியில் தோல்வியுற்றதால் இந்தியாவுக்கு வெறும் வெள்ளிப் பதக்கம் மட்டுமே வாய்த்தது.

WhatsApp channel