தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Aus 4th Test:உணவு இடைவேளை...இரண்டு விக்கெட்டுகளை இழந்த ஆஸி. நிதான ஆட்டம்!

Ind vs Aus 4th Test:உணவு இடைவேளை...இரண்டு விக்கெட்டுகளை இழந்த ஆஸி. நிதான ஆட்டம்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 09, 2023 12:21 PM IST

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் முதல் செஷனில் பேட்டிங், பந்து வீச்சு என இரண்டுக்கும் ஒத்துழைக்கும் விதமாக ஆடுகளம் அமைந்துள்ளது. உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.

பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் நான்காவது போட்டியில் பந்தை டிபெண்ட் செய்யும் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் நான்காவது போட்டியில் பந்தை டிபெண்ட் செய்யும் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா (REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

போட்டி தொடங்குவதற்கு முன்பு டாஸ் நிகழ்வில் இரு நாட்டு பிரதமர்களும் பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தனர். இதையடுத்து டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் ஸ்பின் பெளலர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த நிலையில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

இதைத்தொடர்ந்து முதல் நாளிலேயே பந்து நன்கு திரும்பும் விதமாக அமைக்கப்பட்ட ஆடுகளத்துக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன. இதனால் இன்று போட்டி நடைபெறும் அகமதாபாத் ஆடுகளம் எவ்வாறு இருக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

ஆனால் அகமதாபாத் ஆடுகளத்தில் போட்டி தொடங்கி முதல் செஷன் முடிந்திருக்கும் நிலையில் பேட்டிங், பெளலிங் என இரண்டுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி தொடக்க பேட்ஸ்மேன்களான ட்ராவிஸ் ஹெட் - உஸ்மான் கவாஜா ஆகியோர் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அணியின் ஸ்கோர் 61 என இருந்தபோது, ட்ராவிஸ் ஹெட் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அவரது விக்கெட்டை அஸ்வின் வீழ்ததினார்.

இதைத்தொடர்ந்து பேட் செய்ய வந்த லபுஸ்சேன் பொறுமையாக ஆடி வந்தார். ஸ்பின் பெளலிங்கை அவர் சிறப்பாக எதிர்கொண்ட நிலையில், வேகப்பந்து வீச்சாளரான ஷிமியை பந்து வீச அழைத்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா.

3 ரன்கள் எடுத்திருந்த லபுஸ்சேன் ஷிமி பந்தில் இன்சைடு எட்ஜ் ஆகி ஸ்டம்புகள் தெறிக்க அவுட்டானார்.

பின்னர் வந்த கேப்டன் ஸ்மித் மற்றும் தொடக்க பேட்ஸ்மேன் கவாஜா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

உணவு இடைவெளி வரை 29 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

WhatsApp channel

டாபிக்ஸ்