தமிழ் செய்திகள்  /  Sports  /  Icc Rankings: Suryakumar Dispatches Babar Azam, Rises To World No. 3 In T20is

ICC T20I batsman ranking: மூன்றாவது இடத்துக்கு முன்னேறியா சூர்யகுமார் யாதவ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 22, 2022 02:11 PM IST

சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வரும் சூர்யகுமார் யாதவ், ஐசிசி டாப் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாபர் ஆசாமை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் டாப் 10 டி20 பேட்ஸ்மேன்கள் வரிசையில் இருக்கும் ஒரே இந்திய பேட்ஸ்மேனாகவும் உள்ளார்.

பாபர் ஆசாமை பின்னுக்கு தள்ளி ஐசிசி டாப் டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய இந்தியாவின் சூர்யகுமார் யாதவ்
பாபர் ஆசாமை பின்னுக்கு தள்ளி ஐசிசி டாப் டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ், பேட்டிங்கில் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தார். சூழலுக்கு ஏற்பட நிதான ஆட்டம், அதிரடி என விளையாடிய இவர் ரன்களையும் குவித்தார். இதனால் ஒரு புள்ளி முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

அதேசமயம் பாகிஸ்தான் அணியின் ரன் மெஷினாக இருந்து வந்த பாபர் ஆசாம், அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் பார்ம் இழந்த தவித்தார். மொத்தம் 6 போட்டிகள் விளையாடி 68 ரன்கள் மட்டும் எடுத்தார். இதனால் ஒரு புள்ளி பின்தங்கி நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக டேவிட் மாலன், ஆரோன் பின்ச், டேவோன் கான்வே, நிசன்கா, முகமது வாசீம், ஹெண்ட்ரிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளார்கள்.

டாப் 10 இடங்களில் இந்தியாவிலிருந்து சூர்யகுமார் யாதவ் மட்டும் இடம்பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ரோஹித் ஷர்மா 14, விராட் கோலி 16 ஆகிய இடங்களில் உள்ளார்கள்.

WhatsApp channel