தமிழ் செய்திகள்  /  Sports  /  Fifa World Cup 2022: Goal In 68 Seconds, Davies Scores Fastest Goal During Canada Vs Croatia Match

Fifa world cup 2022: ஆட்டம் தொடங்கிய 68 விநாடியில் கோல்! கனடா வீரர் உலக சாதனை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 28, 2022 12:00 PM IST

குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் கனடா வீரர் அல்போன்சா டேவிஸ் ஆட்டம் தொடங்கிய 68 விநாடியேலேயே கோல் அடித்து சாதனை புரிந்துள்ளார். இருப்பினும் இந்த போட்டியில் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியுள்ளது கனடா அணி.

உலகக் கோப்பை தொடரில் அதிவேக கோல் அடித்து சாதனை புரிந்த கனடா வீரர் அல்போன்சா டேவிஸ்
உலகக் கோப்பை தொடரில் அதிவேக கோல் அடித்து சாதனை புரிந்த கனடா வீரர் அல்போன்சா டேவிஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த கோல் உலகக் கோப்பை தொடரில் கனடா அணியின் முதல் கோலாக அமைந்திருப்பதோடு, சாதனை கோலாவும் மாறியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக ஆட்டத்தின் முடிவு வரை கோல் அடிப்பதற்காக கனடா அணி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் கைகொடுக்காமல் போனது. இந்தப் போட்டியில் குரோஷியா அணி ஆட்டத்தின் 36, 44, 70, 90 ஆகிய நிமிடங்களில் மொத்தம் நான்கு கோல்கள் அடித்தன.

இதன்மூலம் 4-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா வெற்றி பெற்றது. குரூப் பிரிவில் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய கனடா தொடரை விட்டு வெளியேறியது.

முதல் போட்டியில் பெல்ஜியம் அணிக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் கனடா அணி தோல்வியை தழுவியது. தற்போது குரோஷியா அணியிடம் இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ள நிலையில், கடைசி போட்டியில் டிசம்பர் 1ஆம் தேதி மொராக்கோ அணியை எதிர்கொள்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்