தமிழ் செய்திகள்  /  Sports  /  Cwg 2022: Pv Sindhu Saunters To Maiden Individual Gold In Commonwealth Games

CWG 2022: தங்கம் வென்ற பிவி சிந்து! காமன்வெல்த் போட்டிகளில் ஹாட்ரிக் பதக்கம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 08, 2022 03:14 PM IST

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து.

காமன்வெல்த் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டில் தங்கம் வென்றார் பிவி சிந்து
காமன்வெல்த் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டில் தங்கம் வென்றார் பிவி சிந்து

ட்ரெண்டிங் செய்திகள்

கனடாவின் மிச்செல்லே லீ என்பவரை 21-15, 21-13 என்ற நேர் செட்களில் பிவி சிந்து தோற்கடித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்றார் பிவி சிந்து. இதைத்தொடர்ந்து 2018ஆம் ஆண்டு கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற தொடரில் வெள்ளி வென்ற அவர், தற்போது தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் ஹாட்ரிக் பதக்கங்களை பெற்றது மட்டுமல்லாமல் மூன்று வகை பதக்கங்களையும் பிவி சிந்து வென்றுள்ளார்.

கனடா வீராங்கனை மிச்செல்லே லீவுடனான இறுதிப்போட்டியை பொறுத்தவரை, முதல் செட்டில் மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பிவி சிந்து. தொடர்ச்சியாக முன்னிலை பெற்று வந்த அவர் ஒரு கட்டத்தில் 15-8 என்ற புள்ளிகளை பெற்றார். இதையடுத்து முதல் சுற்றில் 21-15 என்ற கணக்கில் தன் வசம் ஆக்கினார்.

இரண்டாவது செட்டில் உயரமான பிவி சிந்துவின் உடல் பகுதியை டார்கெட் செய்து ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மிச்செல்லே லீ. ஆனால் அதை மிகவும் எளிதாக சமாளித்து விளையாடிய பிவி சிந்து, இந்த செட்டில் முன்னிலை பெற்று ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இறுதியில் 21-13 என்ற புள்ளி கணக்கில் இரண்டாவது செட் ஆட்டத்தையும் தன் வசமாக்கி தங்க பதக்கத்தை வென்றார்.

இவரது வெற்றியின் மூலம் இந்தியாவின் பதக்க  கணக்கு 56 என உயர்ந்துள்ளது. 

WhatsApp channel