தமிழ் செய்திகள்  /  Sports  /  Cwg 2022: New Stars Emerge, Favourites Shine As India Finish 4th On Commonwealth Games 2022 Medal Table

CWG 2022: புதிய திறமைகள் சாதனைகள், பங்களிப்புகள்! 4வது இடத்தை பிடித்த இந்தியா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 09, 2022 01:58 PM IST

மல்யுத்தம், பேட்மிண்டன் விளையாட்டுகளில் எதிர்பார்த்த நம்பிக்கை நட்சத்திரங்களின் பதக்க வேட்டை, தடகள போட்டிகளில் புதிய சாதனை, புதிய திறமைகளின் பங்களிப்பு, பதக்கங்கள் என பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவுக்கு சிறப்பானதாக அமைந்தது. பதக்கப்பட்டியலில் 61 பதக்கங்களுடன் நான்கவது இடத்தை பிடித்தது.

பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகள்
பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

இதன்பின்னர் பதக்க நம்பிக்கை வைக்கப்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பலரும் ஏமாற்றாமல் பதக்கங்களை வென்றனர். இந்த தொடரில் பல்வேறு இளம் வீரர்களும், வீராங்கனைகளும் புதிய வரலாற்று சாதனைகளையும் புரிந்தனர். இதையடுத்து தொடஇந்ரின் முடிவில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தமாக 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

2018ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் மொத்தம் 66 பதக்கங்களை வென்று 3வது இடத்தை பிடித்தது இந்தியா. ஆனால் இம்முறை 5 பதக்கங்கள் குறைவாக வென்றதோடு, நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தியா அணி அதிகமாக பதக்கங்களை குவிக்கும் விளையாட்டான துப்பாக்கி சுடுதல் போட்டி இந்த முறை இடம்பெறாத நிலையில், பதக்க எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. ஆனாலும் ட்ரிபிள் ஜம்ப், டேபிள் டென்னிஸ் உள்பட சில போட்டிகளில் இந்தியா புதுமையான சாதனைகள் புரிந்துள்ளது.

தடகள போட்டியில் 8 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இதில் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் முதல் முறையாக இந்தியவுக்கு தங்கம் பெற்று தந்தார் எல்ட்ஹோஸ் பால். இவரைத்தொடர்ந்து உயரம் தாண்டுதலில் அப்துல்லா அபுபக்கர் வெள்ளி பதக்கமும் வென்றார்.

அதேபோல் ஈட்டி எறிதல் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அன்னு ராணி முதல் முறையாக வெண்கலம் வென்றார். கடந்த 1996 முதல் சுமார் 6 முறை ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் கென்யா வீரர்கள் தங்கள் வசம் வைத்திருந்தனர். அவர்களின் அசைக்க முடியாத சாதனையை 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் விளையாட்டில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே முறியடித்து வெள்ளி வென்றார். இந்த முறை தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை கென்யா வீரர்களே வென்றனர்.

லவ்லி செளபே, ருபா ராணி டிர்கே, பிங்கி, நயன்மோனி சாய்கா ஆகியோர் லான் பெளல் என்று இந்தியர்களுக்கு பெரிதாக அறிமுகம் இல்லாத போட்டிகளில் பெண்களுக்கான நான்கு பேர் அணி போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனைபுரிந்ததோடு, இந்த விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். அதேபோல் ஆண்களுக்கான நான்கு பேர் அணி லான் பெளல் போட்டியில் சந்தன் குமார் சிங், தினேஷ் குமார், நவ்நீத் சிங், சுனில் பகதூர் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.

இந்தியா டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் இந்த முறை நான்கு பதக்கங்களை வென்றதோடு, காமன்வெல்த் போட்டிகளில் மொத்தமாக 7 பதக்கங்களை வென்று காமன்வெல்த் போட்டியின் கிங் என நிருபித்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாமல் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய அமித் பங்கால், காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இரண்டு நாள்கள் நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கம் தனித்துவமாக இருந்தது. தங்கம் வென்ற வினேஷ் போகத், தொடர்ச்சியாக மூன்று முறை காமன்வெல்த் பதக்கங்களை வென்றது மட்டுமல்லாமல், ஆசிய போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றவர் என்ற சாதனை படைத்தார். ரவிகுமார் தஹியா, பஜ்ரங் புனியா, தீபக் புனியா, சாக்‌ஷி மாலிக் என பதக்க நம்பிக்கைகள் அனைவரும் தலா ஒரு பதக்கங்களை வென்றனர்.

இறுதியாக இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து, காயம் அடைந்தாலும் அதை பொருப்படுத்தாமல் சிறப்பாக விளையாடி முதல் முறையாக காமன்வெல்த் தங்கத்தை வென்றார். இதன் மூலம் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்றவர் என்ற சாதனை புரிந்துள்ளார்.

அதேபோல் ஆண்கள் கலப்பு ஆட்டத்தில் சாத்விக்சாய்ராக் ராங்கிரெட்டி, சிராங் ஷெட்டி தங்க பதக்கமும், ஒற்றையர் பிரிவில் லக்‌ஷ்யா சென் தங்கமும், கிடாம்பி ஸ்ரீகாந்த் வெண்கலமும் வென்றார்கள். ஆனால் கடந்த முறைந்த கலப்பு இரட்டையர் பிரவில் தங்கம் வென்ற இந்தியா இம்முறை அதை தக்க வைக்க முடியாமல் வெள்ளி வென்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாக்கியில் பெண்கள் பிரிவில் வெண்கலமும், ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றது. அத்துடன் முதல் முறையாக காமன்வெல்த் போட்டிகளில் சேர்க்கப்பட்ட மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது.

WhatsApp channel