தமிழ் செய்திகள்  /  Sports  /  Cwg 2022: Jaismine Lamboria Wins Maiden Commonwealth Games Medal, Bags Bronze In Women's Lightweight Division

CWG 2022: முதல் காமன்வெல்த் பதக்கத்தை வென்ற இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 07, 2022 01:53 AM IST

காமன்வெல்த் போட்டிகளில் பெண்களுக்கான லைட் வெயிட் குத்துசண்டை போட்டியில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இது அவரது முதல் காமன்வெல்த் பதக்கமாக அமைந்துள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தனது முதல் பதக்கத்தை வென்றார் இந்தியாவின் இளம் வீராங்கனை ஜெய்ஸ்மின் லம்போரியா
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தனது முதல் பதக்கத்தை வென்றார் இந்தியாவின் இளம் வீராங்கனை ஜெய்ஸ்மின் லம்போரியா

ட்ரெண்டிங் செய்திகள்

இங்கிலாந்து வீராங்கனை ஜெம்மா பைஜ் ரிச்சர்ட்சனுக்கு எதிரான போட்டியில் 2-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார் ஜெய்ஸ்மின் லம்போரியா

காலிறுதி போட்டியில் நியூசிலாந்தின் ட்ராய் கார்டன் என்பவரை வீழ்த்தினார் ஜெயஸ்மின். காமன்வெல்த் போட்டிகளுக்கான தேர்வின்போது 2018ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற சிம்ரன்ஜீத் கெளர்-ஐ தோற்கடித்தார் ஜெய்ஸ்மின். இதைத்தொடர்ந்து 2022 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற பர்வீன் ஹூடாவை வீழ்த்தி காமன்வெல்த் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

இளம் வீராங்கனையான ஜெய்ஸ்மின் அனைத்து இந்திய பல்கலைகழக விளையாட்டில் இரண்டு தங்க பதக்கமும், கேலோ இந்தியா யூத் விளையாட்டில் ஒரு தங்கமும் வென்றார். சர்வதேச அளவில் டப்லினில் நடைபெற்ற யூத் எஸ்கார் பெண்கள் பாக்சிங் கோப்பை வென்ற அவர், மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய யூத் பாக்சிங் தொடரில் வெண்கலம் வென்றுள்ளார்.

இதற்கிடையே பெர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டை பொறுத்தவரை இந்தியா வீராங்கனைகான நிகத் ஸரீன், அமித் பங்கால் ஆகியோர் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

WhatsApp channel