தமிழ் செய்திகள்  /  Sports  /  Cwg 2022: India Women's Cricket Team Reaches Commonwealth Games 2022 Final

CWG 2022: மகளிர் டி20 கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்தியா!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 07, 2022 02:04 AM IST

காமன்வெல்த் போட்டிகளில் மகளிருக்கான டி20 போட்டிகளில் இந்தியா அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்து பதக்கத்தை உறுதிபடுத்தியுள்ளது. அரையிறுதி போட்டியி்ல இங்கிலாந்து அணியை 4 ரன்களில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் மகளிர் டி20 போட்டியில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் மகளிர் டி20 போட்டியில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி

ட்ரெண்டிங் செய்திகள்

கடைசி ஓவரில் 13 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு தேவைப்பட்ட நிலையில் இந்திய அணியின் பெளலர் ஸ்நேக் ராணா சிறப்பாக பெளலிங் செய்து 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் இந்தியா அசத்தலான வெற்றியுடன் முதல் அணியாக இறுதிபோட்டிக்கு நுழைந்தது.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் நடாலி ஸ்கிவர், இரண்டு ரன்கள் ஓட முயற்சித்தபோது ரன்அவுட்டாக வெளியாறிய தருணம் திரும்ப்புமுனையாக அமைந்தது. அவர் 43 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து பொறுப்பாக விளையாடி சேஸ் செய்து வந்தார். அவர் அவுட்டானபோது 7 பந்துகளில் 14 ரன்கள் அணிக்கு தேவைப்பட்டது. ஆனால் நடாலி ஸ்கிவரின் ரன்அவுட் அவரை மட்டுமல்லாமல், இங்கிலாந்து அணியையும் வெளியேற்றியது. இதன்மூலம் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்த விளையாடவுள்ளது.

இந்திய இன்னிங்ஸை பொறுத்தவரை அணியின் ஓப்பனிங் பேட்டர் ஸ்மிருத்தி மந்தனா சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தார். அதிரடி ஆட்டம் விளையாடிய அவர் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் இந்திய மகளிர் பேட்டர்களில் அதிக வேக அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை புரிந்தார்.

முன்னதாக டாஸ் வென்று இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பேட்டிங் செய்வதாக தெரிவித்தவுடன் களமிறங்கி தொடக்க பேட்டர்களான மந்தான - செபாலி வர்மா இங்கிலாந்து பெளலர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். பவர்ப்ளே ஓவர் முடிவில் 64 ரன்கள் எடுத்தனர். இதில் மந்தனா மட்டும் 51 ரன்கள் எடுத்தார். 32 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இவர்களை தொடர்ந்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 20, தீப்தி ஷர்மா 22 என பேட்டிங்கில் கலக்கினர். அதேபோல் ஜெமிமா ரோட்ரிக்ஸ் கடைசி கட்டத்தில் 44 ரன்கள் எடுக்க அணியின் ஸ்கோர் 164 ரன்கள் என உயர்ந்தது.

மிகவும் சவால் நிறைந்த இந்த சேஸை விரட்டிய இங்கிலாந்து பேட்டர்களும் கொஞ்சமும் சளைக்காமல் இந்திய பந்து வீச்சை புரட்டினர். தொடக்க பேட்டர் டேனியல் வியாட் 27 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த நிலையில், ராணா அவரது விக்கெட்டை தூக்கினார். அதோபோல் மற்றொரு தொடக்க பேட்டர் சோபியா டங்க்ளேவை, தீப்தி ஷர்மா கிளப்பினார்.

இருப்பினும் கேப்டன் நடாலி ஸ்கிவர் - எமி ஜோன்ஸ் ஆகியோர் 4வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்தனர். கடைசி நேரத்தில் 3 பந்துகளுக்கு 13 தேவைப்பட்ட நிலையில் கேட்ச் டிராப் செய்யப்பட்ட போதிலும் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. பின் 5வது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க இந்தியாவின் வெற்றி உறுதியானது.

மொத்தமாக இந்த ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பான ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.

ஸ்கோர் சுருக்கம்

இந்தியா - 164/5, 20 ஓவர், மந்தனா - 62, ரோட்ரிக்ஸ் - 44 நாட் அவுட்

இங்கிலாந்து - 160/6, 20 ஓவர், நடாலி ஸ்கிவர் - 41, எமி ஜோன்ஸ் - 31, ஸ்நேக் ராணா - 2/28, தீப்தி ஷர்மா - 1/18

WhatsApp channel