தமிழ் செய்திகள்  /  Sports  /  Cwg 2022: India Settle For Silver In Men's Hockey After 0-7 Thrashing By Australia In Final

CWG 2022: ஆண்கள் ஹாக்கியில் இந்தியாவுக்கு வெள்ளி! ஆஸி.க்கு எதிராக படுதோல்வி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 09, 2022 11:24 AM IST

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் பிரிவு ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா 0-7 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் வெள்ளிப்பதக்கத்தை தக்க வைத்துக்கொண்டது.

ஆஸ்திரேலியா வீரர் கோல் அடிப்பதை தடுக்கும் முயற்சியில் இந்திய வீரர்
ஆஸ்திரேலியா வீரர் கோல் அடிப்பதை தடுக்கும் முயற்சியில் இந்திய வீரர் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்க தொடங்கிய ஆஸ்திரேலியா வீரர்கள் அட்டாக் மற்றும் தடுப்பு ஆட்டம் என இரண்டையும் தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். காமன்வெல்த் போட்டிகளை பொறுத்தவரை இந்தியாவுக்கு இது மூன்றாவது வெள்ளிப்பதக்கமாக அமைந்துள்ளது.

கடந்த 2010 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் ஆண் ஹாக்கி இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா. இதையடுத்து தற்போது மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு தோல்வியை தழுவி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது.

ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என்று முன்னிலை வகித்தது ஆஸ்திரேலியா. இதனால் 3 கோல்கள் வரை முன்னிலை பெற வேண்டிய நிலையில் களமிறங்கிய இந்தியா அடுத்த பாதி தொடங்கியவுடன் கோல்க்கான முயற்சியில் இறங்கியது. ஆகாஷ்தீப் அடித்த ஷாட்டை அற்புதமாக தடுத்தார் ஆஸ்திரேலியா கோல் கீப்பர். அதுவரை ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா மீது இந்தியா முதல் முறையாக நெருக்கடியை தந்தது. ஆனாலும் அதுதொடர்ச்சியாக நீடிக்கவில்லை. இதன்பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தடுத்து இரண்டு பெணால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.போதிலும், அதில் ஒன்றை மட்டுமே இந்திய வீரர்கள் தடுத்த நிலையில், 3-0 என முன்னிலை வகித்தது.

இதற்கிடையே அணியின் கேப்டன் மான்ப்ரீத் சிங்குக்கு காயம் ஏற்பட, அவர் வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலியா அணி 5-0 என இருந்தது.

ஆட்டத்தின் கடைசி பாதியில் ஆஸ்திரேலியா வீரர்கள் சில தவறுகளை வெளிப்படுத்த, அதன்மூலம் கிடைத்த வாய்ப்பை இந்திய வீரர்கள் வீணடித்தனர். அந்த சமயத்தில் இந்திய வீரர்கள் போதுமான நெருக்கடியை ஆஸ்திரேலியா வீரர்களுக்கு தராத நிலையில், தவறுகள் ஒருபுறம் செய்தாலும் மறுபுறம் கோல்களையும் தவறாமல் அடித்தனர்.

ஆட்டத்தின் கடைசி பாதியில் காயமுற்ற மான்ப்ரீத் களம் இறங்காத நிலையில், ஹர்மன்ப்ரீத் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார். இருப்பினும் ஆஸ்திரேலியா 7 கோல்கள் பெற்று முன்னிலையில் இருந்த நிலையில் அவர்களின் வெற்றியும் உறுதியானது.

காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ச்சியாக 7வது முறையாக ஆஸ்திரேலியா தங்கம் வென்றுள்ளது. அதாவது இந்த நூற்றாண்டில் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்திக்காத அணியாக ஆஸ்திரேலியா உருவெடுத்துள்ளது.

WhatsApp channel