தமிழ் செய்திகள்  /  Sports  /  Cwg 2022: India Full Schedule For Day 9

CWG 2022: மகளிர் டி20,ஆண்கள் ஹாக்கி அரையிறுதி!9வது நாள் இந்தியாவின் முழு அட்டவணை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 06, 2022 02:26 PM IST

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மல்யுத்த போட்டியின் முதல் நாளில் பங்கேற்ற 6 வீரர்களுக்கு இந்தியாவுக்கு பதக்கங்களை பெற்று தந்துள்ளனர். 9வது நாளான இன்று இந்தியா - இங்கிலாந்து இடையேயான மகளிர் டி20 அரையிறுதி, இந்தியா - தென்ஆப்பரிக்கா இடையே ஆண்கள் பிரிவு ஹாக்கி அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளன.

காமன்வெல்த் போட்டிகள் 9வது நாளில் இந்தியா விளையாட இருக்கும் போட்டிகளின் முழு அட்டவணை
காமன்வெல்த் போட்டிகள் 9வது நாளில் இந்தியா விளையாட இருக்கும் போட்டிகளின் முழு அட்டவணை

ட்ரெண்டிங் செய்திகள்

பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், தீபக் புனியா ஆகியோர் தங்க பதக்கத்தையும், அன்ஷு மாலிக் வெள்ளிப்பதக்கத்தையும், திவ்யா காக்ரன், மோஹித் க்ரீவால் ஆகியோர் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர். அதேபோல் லான் பெளல் ஆண்கள் 4 பேர் அணி போட்டியில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து காமன்வெல்த் போட்டிகளின் 9வது நாளான இன்று (ஆகஸ்ட் 6), மல்யுத்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து வினேஷ் போகத், ரவிக்குமார் தாஹியா என புதிதாக 6 பேர் பங்கேற்கவுள்ளனர். மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியா - இங்கிலாந்து இடையே அரையிறுதி போட்டியும், ஆண்கள் பிரிவு ஹாக்கி தொடரில் இந்தியா - தென்ஆப்பரிக்கா அணிகளும் மோதவுள்ளன.

காமன்வெல் விளையாட்டு போட்டிகள் 9வது நாள் முழு அட்டவணை:

நேரம்                   போட்டி                                     போட்டியில் பங்கேற்பவர்/அணியின் விவரம்                                                                                                                                                                       
2:50PMதடகளம்பெண்கள் எறிதல் 55-57 எடை பிரிவு - பூனம் ஷர்மா, ஷர்மிளம் சந்தோஷ்
3:00PMதடகளம்பெண்கள் 10,000 ரேஸ் நடை இறுதிப்போட்டி - பிரியங்கா, பாவனா ஜட்
4:20PMதடகளம்ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதிப்போட்டி - அவினாஷ் சேபிள்
4:45PMதடகளம்பெண்கள் 4x100மீட்டர் தொடர் ஓட்டம், முதல்சுற்று, ஹீட் 1 - ஹிமா தாஸ், டூட்டி சந்த், ஷர்பானி நந்தா, என்எஸ் சிமி
11:30PMதடகளம்பெண்கள் சம்மட்டி எறிதல் இறுதிப்போட்டி - மஞ்சு பாலா 
12:40AM
ஆக். 7
தடகளம்ஆண்கள் 5000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதிபோட்டி - அவினாஷ் சேபிள்
10:50PMபேட்மிண்டன்பெண்கள் இரட்டையர் காலிறுதி - த்ரீஷ ஜாலி/காயத்ரி கோபசந்த்
6:00PMபேட்மிண்டன்பெண்கள் ஒற்றையர் பிரிவு  காலிறுதி - ஆகர்ஷி காஷ்யப்
10:00PMபேட்மிண்டன்ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி - கிடாம்பி ஸ்ரீகாந்த்
3:00PMகுத்துசண்டைபெண்கள் குறைந்தபட்ச எடை பிரிவு 45 - 48 கிலோ அரையிறுதி - நீது  
3:30PMகுத்துசண்டைஆண்கள் ப்ளேவெயிட் 48 - 51 கிலோ அரையிறுதி - அமித் பங்காஸ்
7:15PMகுத்துசண்டைபெண்கள் லைட் ப்ளைவெயிட் 48 - 50 கிலோ அரையிறுதி - நிகத் ஸரீன்
8:00PMகுத்துசண்டைபெண்கள் லைட்வெயிட் 57 - 60 கிலோ எடைப்பிரிவு - ஜாஸ்மின் 
12:45PMகுத்துசண்டைஆண்கள் வெல்டப்வெயிட் 63.5 - 67 கிலோ ரோஹித் தோகஸ்
1:30PMகுத்துசண்டைசூப்பர் ஹெவி வெயிட் (92 கிலோவுக்கு அதிகமாக) - சாகர்
3:30PMகிரிக்கெட்மகளிர் டி20 அரையிறுதி போட்டி - இந்தியா vs இங்கிலாந்து 
10:30PMஹாக்கிஆண்கள் ஹாக்கி அரையிறுதி - இந்தியா vs தென்ஆப்பரிக்கா
2:00PMடேபிள் டென்னிஸ்16 பேர் பெண்கள் இரட்டையர் சுற்று - அஹுலா ஸ்ரீஜா/ரீத் டென்னிசன்
2:00PMடேபிள் டென்னிஸ்16 பேர் பெண்கள் இரட்டையர் சுற்று - மனிகா பத்ரா/தியா பராக் சித்தாலே
6:00PMடேபிள் டென்னிஸ் கலவை இரட்டையர் அரையிறுதி - அச்சந்தா ஷரத் கமல்/ அஹுலா ஸ்ரீஜா
6:15AMபாரா டேபிள் டென்னிஸ்ஆண்கள் ஒற்றையர் பிரிவு கிளாசஸ் 3-5: வெண்கல பதக்கத்துக்கான போட்டி - ராஜ் அரவிந்தர் அழகர்
12:15AM

ஆக். 7
பாரா டேபிள் டென்னிஸ்பெண்கள் ஒற்றையர் பிரிவு கிளாசஸ் 3-5: வெண்கல பதக்கத்துக்கான போட்டி - சோனல்பென் படேல்
1:00AM

ஆக். 7
பாரா டேபிள் டென்னிஸ்பெண்கள் ஒற்றையர் பிரிவு கிளாசஸ் 3-5: தங்கபதக்கத்துக்கான போட்டி - பவினா படேல் 
3 மணி முதல்மல்யுத்தம்ஆண்கள் ப்ரீஸ்டைல்  57 கிலோ காலிறுதி போட்டி - ரவி குமார்
 மல்யுத்தம்ஆண்கள் ப்ரீஸ்டைல் 97 கிலோ காலிறுதி போட்டி - தீபக் நெக்ரா
 மல்யுத்தம்பெண்கள் ப்ரீஸ்டைல் 76 கிலோ காலிறுதி போட்டி - பூஜா ஷிகாக்
 மல்யுத்தம்பெண்கள் ப்ரீஸ்டைல் 53 கிலோ - நோர்டிக் சிஸ்டம் போட்டி 3 - வினேஷ் போகத்
 மல்யுத்தம்பெண்கள் ப்ரீஸ்டைல் 50 கிலோ - நோர்டிக் சிஸ்டம் போட்டி 3 - பூஜா ஹெலாட்
 மல்யுத்தம்ஆண்கள் ப்ரீஸ்டைல் 74 கிலோ 1/8 இறுதிப்போட்டி - நவீன்
 மல்யுத்தம்பெண்கள் ப்ரீஸ்டைல் 53 கிலோ - நோர்டிக் சிஸ்டம் போட்டி 2 - வினேஷ் போகத்
 மல்யுத்தம்பெண்கள் ப்ரீஸ்டைல் 50 கிலோ - நோர்டிக் சிஸ்டம் போட்டி 1 - பூஜா ஹெலாட்
 மல்யுத்தம்பெண்கள் ப்ரீஸ்டைல் 53 கிலோ - நோர்டிக் சிஸ்டம் போட்டி 6 - வினேஷ் போகத்

WhatsApp channel