தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Jasprit Bumrah: அறுவை சிகிச்சை முடித்த பும்ரா! அணிக்கு எப்போது திரும்புகிறார்?

Jasprit Bumrah: அறுவை சிகிச்சை முடித்த பும்ரா! அணிக்கு எப்போது திரும்புகிறார்?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 09, 2023 01:32 PM IST

முதுகு வலி காயத்துக்கு நியூசிலாந்தில் வெற்றிகரமாக சிகிச்சையை முடித்துள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, வரும் அக்டோபரில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கி திட்டமிட்டுள்ளாராம்.

வெற்றிகரமான முதுகு வலி காயத்துக்கு அறுவை சிகிச்சை முடித்த ஜஸ்ப்ரீத் பும்ரா
வெற்றிகரமான முதுகு வலி காயத்துக்கு அறுவை சிகிச்சை முடித்த ஜஸ்ப்ரீத் பும்ரா

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து நான்கு மாதம் ஓய்வுக்கு பின்னர் ஆகஸ்ட் மாதம்தான் பந்து வீச்சு பயிற்சியை மேற்கொள்வார் என பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

பும்ரா பயிற்சிக்கு திரும்பவது பற்றஇ பிசிசிஐ மருத்துவ குழு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் பயிற்சியை தொடங்கும் அவருக்கு படிப்படியாக பணிச்சுமை அளிக்கப்படும். இதன்மூலம் அவர் அக்டோபர் - நவம்பரில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு தன்னை தயார்படுத்தி கொள்ளும் வாய்ப்புகள் அமையக்கூடும்.

முன்னதாக, பும்ரா இந்திய அணியில் இடம்பெறுவதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தேசிய கிரிக்கெட் அகாடமியிலிருந்து பிசிசிஐ மருத்துவ குழுவினர் அவருக்கு நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினர். அதன்படி அவரும் அறுவை சிகிச்சை செய்து முடித்துள்ளார்.

ஏற்கனவே பும்ரா, ஐபிஎல் 2023 சீசனிலிருந்தும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்தும் முழுவதுமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் செப்டம்பரில் இருந்தே பும்ரா காயம் காரணமாக கிரிக்கெட் விளையாடவில்லை. தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான தொடர், டி20 உலகக் கோப்பை தொடர் என இரண்டு பெரிய தொடர்களிலும் அவர் பங்கேற்கவில்லை.

அதேபோல் கடந்த ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. சிகிச்சை மற்றும் போதிய ஓய்வுக்கு பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் அணிக்கு திரும்புவதாக இருந்தது.

ஆனால் பும்ரா பந்து வீசுவதில் சிரமம் அடைந்த நிலையில், பிசிசிஐ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை மீண்டும் ஓய்வு பெற அறிவுறுத்தியது.

தற்போது தனது காயத்துக்கு முழுமையாக அவர் சிகிச்சை பெற்றிருக்கும் நிலையில் போதிய ஓய்வுக்கு பின்னர் கிரிக்கெட் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்