தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Bcci: Wtc Finalக்கு இன்னும் 6 நாள்கள்தான் உள்ளது - பணக்கார கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு வந்த சோதனை

BCCI: WTC Finalக்கு இன்னும் 6 நாள்கள்தான் உள்ளது - பணக்கார கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு வந்த சோதனை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 01, 2023 11:29 AM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், இந்திய அணியிக்கு மெயின் ஸ்பான்சர் இன்னும் கிடைக்காமலேயே உள்ளது.

புதிய பயிற்சி ஜெர்சியுடன் இந்திய வீரர்கள்
புதிய பயிற்சி ஜெர்சியுடன் இந்திய வீரர்கள் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்றடைந்துள்ள நிலையில், அங்கு பயிற்சியை தொடங்கியுள்ளனர். கடந்த இரண்டு மாத காலமாக ஐபிஎல் தொடரில் வெள்ளை பந்து கிரிக்கெட் ஆடிய இந்திய வீரர்களுக்கு சிவப்பு பந்தில் விளையாடும் டெஸ்ட் போட்டிகள் சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன் இந்திய அணி புதிய பயிற்சி ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. நீல நிறத்தில் இருந்த அந்த ஜெர்சியில் பிசிசிஐ லோகோவும், இந்த ஜெர்சி மற்றும் அணியின் கிட் ஸ்பான்சரான அடிடாஸ் நிறுவன லோகோவும் இடம்பிடித்து இருந்தது.

இதைத்தொடர்ந்து இந்திய அணிக்கு மெயின் ஸ்பான்சர், பிசிசிஐக்கு இன்னும் கிடைக்கவில்லை. போட்டி தொடங்க இன்னும் 6 நாள்களே மீதமிருக்கும் நிலையில் ஸ்பான்சர் கிடைக்காத பட்சத்தில் வெறும் வெள்ளை ஜெர்சி மட்டும் அணிந்து இந்திய வீரர்கள் விளையாடும் நிலை ஏற்படும்.

முக்கியத்துவம் வாய்ந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில், கோடிகளில் புரளும் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, தனது அணிக்கு ஸ்பான்சரை தேடாமல் இருப்பது பேசு பொருளாகியுள்ளது.

முன்னதாக, இந்திய அணிக்கு பிரபல ஆன்லைன் நிறுவனமான BYJU ஸ்பான்சர் செய்தது. ஆனால் அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு காரணமாக ஒப்பந்தம் முடிவதற்குள் கடந்த மார்ச் மாதம் விலகிக்கொண்டது.

இதன்பின்னர் வேறு சில பிரபல நிறுவனங்களிடம் இந்திய அணிக்காக ஸ்பான்சர் அளிக்க பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எந்த நிறுவனமும் ஸ்பான்சர் அளிக்க முன்வாராத நிலையில், ஸ்பான்சரை தேடும் டெண்டரையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை.

இந்திய அணியின் ஸ்பான்சர் விவகாரத்தில், "இந்திய கிரிக்கெட் அணி குறைந்த டீல்களுடன் கூடிய ஒப்பந்தங்களை காட்டிலும், மதிப்புமிக்க, நீண்ட கால ஸ்பான்சரிடம் தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுவதாக" பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்