price
இந்தியாவில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்
Updated on 14 Nov, 202410 கிராம் வெள்ளி விலை
100 கிராம் வெள்ளி விலை
1 கிலோ வெள்ளி விலை
தொழில்துறை பயன்பாட்டைத் தவிர, வெள்ளி நகைத் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா உலகின் மிகப்பெரிய வெள்ளி நுகர்வோராகவும், விலைமதிப்பற்ற உலோகத்தின் முக்கிய இறக்குமதியாளராகவும் உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விலைமதிப்பற்ற உலோகத்திற்கான தேவை உலகளாவிய விலைகளை ஆதரிக்க உதவுகிறது. இறக்குமதி வரிகள் மற்றும் பிற வரிகளைத் தவிர, உள்நாட்டு வெள்ளி விலைகளை தீர்மானிப்பதில் சர்வதேச விலைகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. தங்கத்தைப் போலவே வெள்ளியும் ஒரு முதலீட்டு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. முக்கிய இந்திய நகரங்களில் சமீபத்திய வெள்ளி விலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Bangalore
Per 10 gram ₹930 -1.00Chennai
Per 10 gram ₹1038 +1.00Delhi
Per 10 gram ₹940 -1.00Kolkata
Per 10 gram ₹948 -1.00Mumbai
Per 10 gram ₹933 -1.00Pune
Per 10 gram ₹943 -1.00
Find Silver price in your region
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வெள்ளி விலை
City Name
10g Price
100g Price
1Kg Price
- Ahmedabad
- ₹928
- ₹9280
- ₹92800
- Bangalore
- ₹930
- ₹9300
- ₹93000
- Bhubaneswar
- ₹1034
- ₹10340
- ₹103400
- Chandigarh
- ₹934
- ₹9340
- ₹93400
- Chennai
- ₹1038
- ₹10380
- ₹103800
- Coimbatore
- ₹1040
- ₹10400
- ₹104000
- Delhi
- ₹940
- ₹9400
- ₹94000
- Hyderabad
- ₹1044
- ₹10440
- ₹104400
- Jaipur
- ₹944
- ₹9440
- ₹94400
- Kerala
- ₹1048
- ₹10480
- ₹104800
- Kolkata
- ₹948
- ₹9480
- ₹94800
கடந்த 15 நாட்களில் வெள்ளி விலை
Dates
10g Price
1kg Price
- Nov 13, 2024
- ₹941
- ₹94100 0.00
- Nov 12, 2024
- ₹941
- ₹94100 -2000.00
- Nov 11, 2024
- ₹961
- ₹96100 -1000.00
- Nov 10, 2024
- ₹971
- ₹97100 0.00
- Nov 09, 2024
- ₹971
- ₹97100 0.00
- Nov 08, 2024
- ₹971
- ₹97100 1000.00
- Nov 07, 2024
- ₹961
- ₹96100 -3000.00
- Nov 06, 2024
- ₹991
- ₹99100 0.00
- Nov 05, 2024
- ₹991
- ₹99100 -1000.00
- Nov 04, 2024
- ₹1001
- ₹100100 0.00
- Nov 03, 2024
- ₹1001
- ₹100100 100.00
- Nov 02, 2024
- ₹1000
- ₹100000 -3000.00
- Nov 01, 2024
- ₹1030
- ₹103000 -200.00
- Oct 31, 2024
- ₹1032
- ₹103200 1000.00
வெள்ளி பற்றி மேலும் தெரிந்துகொள்ள
தங்கத்தை விட வெள்ளி மலிவானதாக கருதப்படுகிறது. உதாரணமாக, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.61.40 என்றால், 1 கிலோ வெள்ளியை ரூ.61,400-க்கு வாங்கலாம். ஆனால் இதே விலையில் இன்றைய மதிப்புக்கு எக்ஸ்சேஞ்ச் விகிதத்தை பொறுத்து நீங்கள் 10 கிராமுக்கு கொஞ்சம் அதிகமாகதான் தங்கம் வாங்க முடியும். நகை வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடையே தங்கத்தை விட வெள்ளிக்கு எப்போதும் அதிக தேவை உள்ளது.
ஏனென்றால், இதன் பயன்பாடு நகைப் பொருட்களுக்கு மட்டும் அல்ல; சில தயாரிப்புகளை உற்பத்தி செய்ய தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்களாலும் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. வெள்ளிக்கு எப்போதுமே அதிக தேவை இருப்பதால், இந்த உலோகத்திற்கான தேவை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும். நீங்கள் இப்போது வெள்ளியில் முதலீடு செய்திருந்தால், எதிர்காலத்தில் வெள்ளி விலை விண்ணைத் தொடும் சமயத்தில் நீங்கள் நிதி ரீதியாக பலனடைவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
இந்தியாவில் தங்கத்தின் விலை போன்ற பல்வேறு காரணிகளால் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்தால் வெள்ளியின் விலையும் உயரும். அதிக அளவில் வெள்ளி வாங்கப்படும்போதும் அதன் விலை உயரக் காரணமாக அமைந்து விடுகிறது. தூய வெள்ளியின் தரம் 999.9, 999.5 அல்லது 999 ஆகும். வெள்ளி நகைகள் மற்றும் கலைப்பொருட்களுக்கு, தூய்மை தரம் 970, 925, 900, 835 ஆகும்.
வெள்ளி அதன் முழுமையான வடிவத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. நகைக்கடைக்காரர்கள் ஸ்டெர்லிங் வெள்ளியைத்தான் பயன்படுத்துகிறார்கள். இது 92.5 சதவிகிதம் வெள்ளி மற்றும் 7.5 சதவிகிதம் மற்ற உலோககத்தின் கலவையாக இருக்கும்.
இந்தியா, தனது வெள்ளி தேவையை பெரும்பாலும் இறக்குமதி மூலம்தான் பூர்த்தி செய்து கொள்கிறது. ஜார்கண்ட், குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தான் அதிக அளவு வெள்ளியை நமது நாட்டில் உற்பத்தி செய்து வருகிறது. வெள்ளியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நமது நாட்டின் உற்பத்தி போதுமானதாக இல்லை.
இதன்காரணமாக, சீனா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து வெள்ளியை நமது நாடு இறக்குமதி செய்து வருகிறது. தற்போது, இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 சதவீதமாக உள்ளது. தேவைக்கு ஏற்ப இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில் இறக்குமதி வரியை மத்திய அரசு மாற்றிக்கொண்டே இருக்கிறது.
இத எதிர்பாத்தீங்களா? சர்ருனு சரிந்த தங்கம் விலை.. இன்று விலைய கேட்ட ஷாக் ஆகிடுவீங்க.. இதோ இன்றைய நிலவரம்!
Thursday, November 14, 2024
புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை..நகைப்பிரியர்களுக்கு உச்சபட்ச ஷாக்.. இன்றைய நிலவரம் இதோ..!
Tuesday, October 29, 2024
புதிய உச்சம்.. 59 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
Wednesday, October 23, 2024
வெள்ளி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வெள்ளியில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
வெள்ளியில் முதலீடு செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. விலைமதிப்பற்ற உலோகமான வெள்ளிக்கு இந்திய நகைச் சந்தைகளில் எப்போதும் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கான தேவை அதிகம் இருப்பதால், இந்த உலோகம் கிடைப்பது குறைந்து வருகிறது. இதன்காரணமாக, இப்போது உங்கள் பணத்தை வெள்ளியில் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் இதன் மதிப்பு இன்னும் அதிகரிக்கும்போது உங்களுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மற்றொரு முக்கியமான உண்மை என்னவென்றால், தங்கத்தை விட வெள்ளியின் விலை குறைவு என்பதால் நீங்கள் வெள்ளியை எளிதில் வாங்கலாம்.
இந்தியாவில் வெள்ளி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் என்னென்ன?
இந்தியாவில், தங்கத்தின் விலை, தொழில்துறை தேவை, மொத்த கொள்முதல், பணவீக்கம் போன்ற காரணிகளால் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை அதிகரித்தால் வெள்ளி விலையும் உயரும். நகைகள், நாணயங்கள், பதக்கங்கள் போன்ற பல்வேறு பொருட்களை தயாரிப்பதற்காக தொழில்துறை நிறுவனங்கள் வெள்ளியைப் பயன்படுத்துகின்றன. பெரிய வர்த்தகங்கள் மற்றும் கொள்முதல் மூலம் சந்தையில் வெள்ளி செல்வாக்கு செலுத்துவது எளிதாகிறது.
இந்தியாவில் வெள்ளியை எங்கே வாங்கலாம்?
இந்தியாவில் உள்ள வங்கிகள், நகைக் கடைகள் மற்றும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களிடம் இருந்து வெள்ளியை நீங்கள் வாங்கலாம். தூய்மை தர பரிசோதனை மற்றும் அவர்கள் வழங்கும் உத்தரவாதத்தின் காரணமாக வங்கிகள் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றன. நகைக்கடைக்காரர்கள் எடையின் அடிப்படையில் வெள்ளிப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். வெள்ளியை ஆன்லைனிலும் பல முன்னணி நிறுவனங்களின் வலைத்தளத்தைப் பயன்படுத்தியும் நீங்கள் வாங்க முடியும்.
தூய வெள்ளியின் தரம் என்ன?
தூய வெள்ளியின் தரம் 999.9, 999.5 அல்லது 999 ஆகும். வெள்ளி உலோகக் கலவைகள், நகைகள் மற்றும் கலைப் பொருட்களுக்கு, தூய்மைத் தரம் 970, 925, 900, 835, 800v ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லிங் வெள்ளி என்றால் என்ன?
வெள்ளி அதன் தூய வடிவத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. நகைக்கடைக்காரர்கள் ஸ்டெர்லிங் வெள்ளியைத்தான் பயன்படுத்துகிறார்கள். இது 92.5 சதவிகிதம் வெள்ளி மற்றும் 7.5 சதவிகிதம் மற்ற உலோகங்கள் சேர்க்கப்பட்ட கலவையாகவே இருக்கும். இதுதான் ஸ்டெர்லிங் வெள்ளி என்றழைக்கப்படுகிறது.