தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Winter Season Foods: வந்துவிட்டது குளிர் காலம்..கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் இவைதான்!

Winter Season Foods: வந்துவிட்டது குளிர் காலம்..கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் இவைதான்!

Dec 23, 2023 07:07 AM IST Karthikeyan S
Dec 23, 2023 07:07 AM , IST

  • குளிர் காலத்தில் நம் உடலுக்கு ஏற்ற உணவுகள் எவை என்பதை தெரிந்து கொண்டு, அதனை நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

குளிா் காலத்தில் நாம் சாப்பிட வேண்டியவைகள் என்னென்ன என்று பார்ப்போம். 

(1 / 6)

குளிா் காலத்தில் நாம் சாப்பிட வேண்டியவைகள் என்னென்ன என்று பார்ப்போம். 

ஆரஞ்சு: குளி்ா காலத்தில் ஜலதோஷ பாதிப்பு அதிகும் இருக்கும். ஆகவே, அவற்றை தடுக்க உடலில் போதிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின் சி அவசியம். அந்த சத்து, ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளது.

(2 / 6)

பசலைக் கீரை: பொதுவாக கீரை வகைகள் அதிகம் சேர்த்தால் உடல் ஆரோக்கியமானதாக இருக்கும். அதிலும், பசலைக் கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்து வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் சேர்ந்து நோய் தாக்காமல் ஆரோக்கியமாக வைக்கும்.

(3 / 6)

வேர்க்கடலை: வேர்க்கடலையை வறுத்து சாப்பிட்டால், உடலில் உள்ள வெப்பம் சரியாக இருப்பதோடு புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்.

(4 / 6)

கொய்யாப்பழம்: நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன், இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கும். கொய்யாவில் உள்ள லைகோபைன் இதயத்தில் ஏற்படும் பிரச்னையை தடுக்கிறது. ஆகவே, குளிா் காலத்தில் சிவப்பு கொய்யா பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது.

(5 / 6)

கேரட்: கேரட்டில் வைட்டமின் பி,சி,டி,ஈ மற்றும் கே உள்ளன. இதில் உள்ள கரோட்டீன், உடலினுள் செல்லும்போது வைட்டமின் 'ஏ' வாக மாறி விடுகிறது. எனவே கேரட்டை சேர்ப்பது அவசியமாகிறது.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்