தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய வெற்றிக்கான பழக்கங்கள்

Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய வெற்றிக்கான பழக்கங்கள்

Mar 09, 2024 01:40 PM IST Priyadarshini R
Mar 09, 2024 01:40 PM , IST

  • Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய வெற்றிக்கான பழக்கங்கள் இவைதான். அவற்றை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். 

சமையல் அடிப்படை - உங்கள் குழந்தைக்கு அடிப்படை சமையல் உக்திகளை கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு உணவு தயாரிப்பது, உணவு பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் இவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போது அவர்கள் தங்களுக்கு தேவையான உணவை தாங்களே தயாரித்துக்கொள்வதுடன், ஆரோக்கியமான உணவு உண்ணும் பழக்கத்தையும் வைத்துக்கொள்கிறார்கள். இது அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு நன்மை கொடுக்கிறது. உணவை வீணாக்குவதையும் தவிர்க்கிறது.

(1 / 10)

நேர மேலாண்மை - உங்கள் குழந்தைகளுக்கு நேர மேலாண்மை மிகவும் அவசியம். அது அவர்களின் கடமைகளை சரிவர செய்வதற்கும், அவர்களின் திறனை அதிகரித்துக்கொள்ளவும் உதவுகிறது. சரியான அட்டவணையிட்டு கல்வி கற்பது, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காலக்கெடுவுக்குள் வேலையை முடிப்பது ஆகிய திறன்கள் அவர்களுக்கு மிகவும் தேவையானவை.

(2 / 10)

சுத்தம் செய்வது அடுக்கி வைத்தல் - உங்கள் குழந்தைகளுக்கு சுய ஒழுக்கம் மற்றும் பொறுப்பை போதிக்க வேண்டும். அவர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும். துணி மடித்து வைப்பது, பொது இடங்களை சுத்தம் செய்வது, அவர்களின் அறைகளை அடுக்கி வைப்பது ஆகியவை மிகவும் அவசியம். இது அவர்களுக்கு சுத்தத்தின் அருமையை உணர்த்தும் மற்றும் அடுக்கிவைப்பதன் அவசியத்தையும் எடுத்துக்கூறும்.

(3 / 10)

பொருளாதார மேலாண்மை - உங்கள் குழந்தைகளுக்கு நிதி சுதந்திரம் மிகவும் அவசியம். பொருளாதார முடிவுகள் எடுக்கும்போது அவர்கள் சரியான முடிவுகளை எடுக்கவேண்டும். அதற்கு அவர்களுக்கு பட்ஜெட்டிங், சேமிப்பு மற்றும் தேவைக்கும், விருப்பத்திற்குமான செலவுகளை வேறுபடுத்தி அதற்கு நிதி ஒதுக்குவது ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். எனவே அவற்றை கற்றுக்கொடுங்கள்.

(4 / 10)

வீட்டு பராமரிப்பு - உங்கள் குழந்தைக்கு எளிமையான வீட்டு பராமரிப்பு பணிகளை கற்றுக்கொடுங்கள். வீட்டில் பல்புகள் பழுதானால் அவற்றை மாற்றுவது, குழாயில் துவாரத்தை அடைப்பது, சிறு பழுதுகளை சரிபார்ப்பது என்று அவர்களை சுதந்திரமாக செயல்பட வைக்க முடியும். இதன் மூலம் அவர்கள் வீட்டில் உள்ள சிறு பிரச்னைகளை சரிசெய்துகொள்வார்கள். இதனால் அவர்கள் வீட்டில் உள்ள பிரச்னைகளை சரிசெய்துகொள்ள முடியும்.

(5 / 10)

தோட்டக்கலை மற்றும் தாவர பராமரிப்பு - உங்கள் குழந்தைக்கு பசுமையை போற்றுவதன் அவசியத்தை கற்றுக்கொடுங்கள். சிறு செடிகளை நடுவது அவற்றை பராமரிப்பது, அவற்றுக்கு தண்ணீர் ஊற்றுவது என்று அவர்களின் பொறுமையை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு சுற்றுச்சூழல் பொறுப்பையும் வளர்த்தெடுக்க வேண்டும். இது அவர்களுக்கு உணவு எப்படி அவர்களின் மேடைக்கு வருகிறது என்பதை உணர்த்தும்.

(6 / 10)

முதலுதவி மற்றும் அவசர கால தயார்நிலை - உங்கள் குழந்தைக்கு அவசர காலங்களை கையாளும் திறனை கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு முதலுதவிகளின் அடிப்படைகளை கற்றுக்கொடுங்கள். சிறு காயங்களை குணப்படுத்துவது, சிபிஆர் செய்வது, பிரச்னை காலங்களில் எவ்வாறு முனைப்புடன் செயல்படுவது போன்றவற்றை கற்றுக்கொடுப்பதன் மூலம், அவர்களை எந்த சூழலையும் கையாள தயாராக்குங்கள்.

(7 / 10)

அடிப்படை தையல் - உங்கள் குழந்தைகக்கு பட்டன் தைக்க கற்றுக்கொடுப்பது, கிழிந்த உடைகளை தைப்பது மற்றும் சிறுசிறு தையல் வேலைகள் என அவர்களுக்கு கற்றுக்கொடுத்தால், அவர்கள் தங்களின் கிழிந்த ஆடைகளை தைத்து அணிந்துகொள்வார்கள். அதை வீணாக்கமாட்டார்கள். அவர்களுக்கு அது நீண்ட நாட்கள் வரும்.

(8 / 10)

தாங்களே தயாரிக்கக்கூடிய பொருட்கள் - உங்கள் குழந்தையின் கிரியேட்டிவிட்டி மற்றும் பிரச்னைகளை தீர்க்கும் திறன்களை வளர்ப்பதற்கு அவர்களுக்கு டு இட் யுவர்செல்ஃப் எனப்படும், அவர்களாகவே செய்யும் கலை பொருட்களை உருவாக்க கற்றுக்கொடுங்கள். இது அவர்களுக்கு அடிப்படையான வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிப்பது, கலை பொருட்கள் தயாரிப்பது என அவர்களின் திரை நேரத்தை குறைக்கவும் உதவும்.

(9 / 10)

உரையாடல் மற்றும் பிரச்னைகளை தீர்ப்பது - உங்கள் குழந்தைக்கு திறந்த உரையாடல் செய்வது மற்றும் பிரச்னைகளை தீர்க்க கற்றுக்கொடுங்கள். நன்றாக கவனிப்பதன் மூலம் பிரச்னைகளை தீர்ப்பது எப்படி என்று கற்றுக்கொடுங்கள். சிந்தனை மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் பிரச்னைகளுக்கு அமைதியான தீர்வுகளை கண்டுபிடிப்பது எப்படி என்று கற்றுக்கொடுங்கள். நேர்மறையான இருவர் உரையாடல் மற்றும் ஆரோக்கியமான தொடர்புகள் மூலம் பிரச்னைகளை தீர்ப்பது எப்படி என்றும் கற்றுக்கொடுப்பது நல்லது.

(10 / 10)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்