தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Fefsi Vijayan: சேரில் முடங்கிய அப்பா; உடம்பெல்லாம் இரத்தக்காயம்.. ஒரே வருடத்தில் தலைகீழாக திரும்பிய வாழ்க்கை - விஜயன்!

Fefsi Vijayan: சேரில் முடங்கிய அப்பா; உடம்பெல்லாம் இரத்தக்காயம்.. ஒரே வருடத்தில் தலைகீழாக திரும்பிய வாழ்க்கை - விஜயன்!

Aug 19, 2023 10:50 AM IST Kalyani Pandiyan S
Aug 19, 2023 10:50 AM , IST

தந்தைக்காக இரத்தம் சிந்தி உழைத்த ஃபெப்ஸி விஜயனின் நெகிழ்ச்சிக்கதை இங்கே!

சினிமாவிற்கு வந்த ஒரு வருடத்தில் நான் சொந்தமாக வீடே கட்டிவிட்டேன். ஆயுள் ரேகையைப் பார்த்தேன். சாக மாட்டோம் என்பது தெரிந்தது. உயிருக்கு துணிந்து இந்தத் துறையில் இறங்கினேன். எந்த ஷாட் கொடுத்தாலும் செய்கிறேன் என்று சொல்வேன். அப்போது சம்பளம் 250 ரூபாய்தான். ஆனால் நான் 1000, 2000 என்று வாங்கிக்கொள்வேன்.  என்னுடைய உடலில் 16 இடத்தில் கீறல்கள் இருக்கின்றன. அவையனைத்தும் அந்த ஒரு வருடத்தில் ஏற்பட்டவை. எல்லாம் என் தந்தைக்காக.. சினிமாவில் நன்றாக இருந்தவர் உடல்நலக்குறைவால் சேரில் உட்கார வேண்டிய சூழல் வாய்த்து விட்டது. அவரது ஒரு கையில் மதுவும் இன்னொரு கையில் 555 சிகரெட்டும் இருக்கும். நான் அவருக்கு சொந்தமாக ஒரு வீட்டைக்கட்டி அதன் சாவியை அவரிடம் கொடுக்க வேண்டும் என்று சபதம் எடுத்தேன். அதற்காகத்தான் அவ்வளவு போராட்டமும். 

(1 / 5)

கஷ்டப்பட்டு நடித்து ஒரு வீட்டை கட்டினேன். அந்த வீட்டின் சாவியை எனது அப்பா கையில் கொடுத்து இன்னொரு கையில் மதுவை கொடுத்தேன். அதைப் பார்த்த என்னுடைய அப்பா  ‘தேங்க்யூ மை சன்’ என்றார்.  அவர் எந்த ஒரு விஷயத்துக்கும் எமோஷன் ஆக மாட்டார். ஆனால் அன்று கொஞ்சம் எமோஷனல் ஆனார்.  அதை பார்த்த நானும் எமோஷனல் ஆனேன். எனது கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது. அதுவரைக்கும் நான் சிகரெட், மது உள்ளிட்ட எதனையுமே தொடாமல் இருந்தேன். எல்லாமே என்னுடைய தந்தைக்காக..

(2 / 5)

போக்கிரி படத்தின் ட்ரெயின் காட்சியை வடிவமைத்தது பற்றி பேசிய அவர், “  அந்தக்காட்சியை எடுப்பதற்காக நான் காலையிலேயே சென்று விட்டேன். ஏழு மணிக்கு முதல் காட்சி. அந்த ஃபைட்டுக்கு தேவையான எல்லா விஷயங்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, அங்கிருந்த கண்ணாடியை பார்த்து தலையை தடவினேன்.  குரு அண்ணன் காரி துப்பி விட்டார். நான் ஏன் என்று கேட்டேன் உடனே அவர் 40 ட்ரெயின் ஃபைட் எடுத்து விட்டாய். எல்லாவற்றிலும் இதைத்தானே செய்கிறாய் என்று சொன்னார் எனக்கு அது செருப்பால் அடித்தது போல இருந்தது. உடனே இயக்குநருக்கு போன் செய்து அந்த சண்டைக்காட்சியை அப்படியே மாலை 6 மணிக்கு மாற்றுங்கள் என்று சொல்லி விட்டு சென்றேன். 

(3 / 5)

மகேஷ் பாபுக்கு போன் செய்தேன். அவரிடம் இந்த ஃபைட்டை இல்லாமல் ஃபைட் எடுத்தால் எப்படி இருக்கும் என்று கேட்டேன். அவர் சூப்பராக இருக்கும் என்று சொன்னார். அதாவது முதலில் எல்லோரும் உள்ளே வருவார்கள்.   கதாநாயகனிடம் ஒருவன் நெருங்கி வந்ததும் நாயகன் அவனை அப்படியே அடித்து ட்ரெயின் ஜன்னல் வெளியே தள்ளி விடுவார். அதன் பிறகு இன்னொருவனை கம்பியில் அடிக்க அந்த கம்பி வளையும்.   

(4 / 5)

அதன் பின்னர் ஃபைட் தொடர அதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் அவனே ட்ரெயின் வெளியே குதித்து விடுவான். அப்படித்தான் அந்த ஃபைட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த ஃபைட் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இங்கேயும் அந்த ஃபைட் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்