Best camera phones: இந்திய சந்தையில் இருக்கும் சிறந்த கேமரா போன்கள்
- Best camera phones 2024: இந்திய சந்தையில் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி இதுவரை வெளியாகி இருக்கும் சிறந்த கேமரா போன்கள் எவை என்பதை பார்க்கலாம்.
- Best camera phones 2024: இந்திய சந்தையில் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி இதுவரை வெளியாகி இருக்கும் சிறந்த கேமரா போன்கள் எவை என்பதை பார்க்கலாம்.
(1 / 12)
புரொபஷனல் கேமராக்களுக்கு இணையான தொழில்நுட்பங்களும், அம்சங்களும் தற்போது மொபைல் கேமரக்களிலேயே இடம்பிடிக்கிறது. இதனால் சிறந்த கேமரா போன்களுக்கான எதிர்பார்ப்பு எப்போதும் இருந்து வருகிறது
(2 / 12)
இந்திய சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் டாப் கேமரா அம்சங்களை கொண்ட போன்களின் லிஸ்டாக இந்துஸ்தான் டைமஸ் டெக் வெளியிட்டிருக்கும் பட்டியலை பார்க்கலாம்
(3 / 12)
Vivo V29 Pro: இந்த போனில் 50MP பிரதான கேமரா உள்ளது. இதனுடன் 12MP செல்ஃபி மோட் கேமரா. மொத்தத்தில் தரமான போட்டோக்கள் எடுப்பதற்கு இது ஒரு சிறந்த போனாக உள்ளது
(4 / 12)
Nothing Phone 2: இதன் பிரதான கேமரா f/2.2 Samsung JN1 சென்சார் கொண்ட 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா, முன்பக்கத்தில் 32MP சோனி ஐஎம்எக்ஸ் 615 சென்சார் உள்ளது.உயர்தர செல்ஃபிக்களைப் எடுப்பதற்கு உகந்த போனாக இது அமைந்துள்ளது.
(5 / 12)
Samsung Galaxy F54: பிரதான கேமரா 108MP உடன் உள்ளது. அதனுடன் 2MP மைக்ரோலென்ஸ். 32MP செல்ஃபி கேமராவை கொம்டிருக்கிறது
(6 / 12)
Motorola Edge 40: முழு-எச்டி தெளிவுத்திறன் மற்றும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்டிருக்கும் இந்த போன், உலகின் மிக மெல்லிய 5G ஸ்மார்ட்ஃபோன் எனக் கூறப்படுகிறது. இந்த போனின் கேமரா அம்சம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது
(7 / 12)
Google Pixel 7a: இது HD+ OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது முந்தைய பிக்சல் A-சீரிஸ் மாடல்களை விட சிறந்ததாக உள்ளது. Wi-Fi, Bluetooth v5.3, NFC மற்றும் பல்வேறு உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்புகளை ஆதரிக்கிறது. ஸ்மார்ட்போனின் அடிப்பகுதியில் USB Type-C (3.2 Gen 2) போர்ட் உள்ளது. கேமராவும் சிறப்பானதாக இருப்பதுடன் தரமான புகைப்படங்களை எடுக்கலாம்
(8 / 12)
Samsung Galaxy M34 5G: இந்த போன் 6.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் கொண்ட 50MP முதன்மை கேமரா, 8 MPஅல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் மூன்றாவது சென்சார் ஆகியவை அடங்கும். மொத்தத்தில் ஒரு சிறந்த புகைப்படத்தை எடுக்க உதவுகிறது
(9 / 12)
Moto G84: Qualcomm Snapdragon 695 சிப், 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் சிறந்த கேமரா போனாக அமைந்துள்ளது. 6.5 இன்ச் FHD+ POLED டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, புகைப்படமும் சிறப்பாக அமைந்துள்ளது
(10 / 12)
Redmi Note 12 Pro+ 5G: இந்த ஃபோன் பிரீமியம் வகை போன்களில் இடம்பிடித்துள்ளது. நுழைகிறது. 200MP பிரதான கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. படங்கள் மற்றும் விடியோக்கள் என இரண்டுக்கும் பொருத்தமானதாக உள்ளது
(11 / 12)
Realme 11 Pro+ 5G: 200MP பிரதான கேமரா, 8MP மற்றும் 2MP மேக்ரோ கேமரா உள்ளது. செல்ஃபிக்களுக்காக 32MP முன்பக்க கேமரா உள்ளது. அனைத்து கேமராக்களுக்கு தரமான புகைப்படங்களை எடுக்க உதவுகிறது
மற்ற கேலரிக்கள்